(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 15, 2015

சிங்கப்பூருக்கு அனுப்புவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி பெண் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்!!

No comments :
சிங்கப்பூருக்கு லேலைக்கு அனுப்புவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் பன்னீர்செல்வம். இவரிடம், பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீது மனைவி ஆயிஷாகனியும், பரமக்குடியில் டிராவல்ஸ் நடத்திவரும் பாலா என்பவரும் சேர்ந்து, சிங்கப்பூரில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சத்தை பெற்றுள்ளனர்.

பின்னர், வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, ஆயிஷாகனியையும், டிராவல்ஸ் உரிமையாளர் பாலாவையும் தேடி வருகின்றனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment