(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 2, 2015

ராமநாதபுரத்தில் தீ விபத்து!!

No comments :
ராமநாதபுரம் கே.கே நகர் பகுதியில் நேற்று காலை குடிசை வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இதில் அந்த பகுதியில் இருந்த மருதன், மாரி, முனியாண்டி, பிச்சையம்மாள், கணேசன் ஆகிய 5 பேரின் குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுபற்றி தகவல்அறிந்த ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தீயணைப்பாளர் ராஜேந்திரன், நிலைய போக்குவரத்து அலுவலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்த துணிகள், பொருட்கள் உள்ளிட்டவை சாம்பலாகின. மின்கசிவு காரணமாகவோ அல்லது அடுப்பில் சமையல் செய்தபோது தீ காற்றில் பறந்தோ இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment