(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 6, 2015

கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் விற்பனை கண்காட்சி!!

No comments :
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்கள் விற்பனைக் கண்காட்சி நடந்தது.


கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் யூசுப் சாகிப் துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இணை இயக்குநர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். அலங்கார நகைகள், சிறுதானிய உணவுப்பொருட்கள், மூலிகை மருந்துகள், பனை ஓலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தேனீ வளர்ப்பு குறித்த இலவச ஆலோசனை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சமூக மேம்பாட்டு பணித்திட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

No comments :

Post a Comment