(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 29, 2015

கீழக்கரையில் குடும்பத் தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை?!!

No comments :
கீழக்கரையில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
 கீழக்கரை 500 பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முஹம்மது காசிம் (33). இவருக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

எனவே, மனைவியை ஏமாற்றுவதற்காக திங்கள்கிழமை இரவு விளையாட்டாக தூக்கு மாட்டியவர் அதில் சிக்கி உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை காலை பார்த்தபோது, தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்.  இது குறித்து, காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினமணி


No comments :

Post a Comment