(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 11, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.19.37 கோடி மானியம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.19.37 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜ்  தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  முதலீட்டாளர்கள் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது  மேலாளர்(பொ) கயாஸ், சிவகங்கை சிட்கோ  கிளை மேலாளர் ராஜாராம், ஆகியோர் முகாம் குறித்து விளக்கினர்.ராமநாதபுரம்  கலெக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் சுந்தர்ராஜ் பேசியதாவது: 


ராமநாதபுரம் மாவட்டத்தில் பின் தங்கிய கமுதியில்  ரூ.4 ஆயிரத்து 536 கோடி மதிப்பில் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம்  உற்பத்தி திட்டம், சுற்றுலாவை மேம்படுத்த தனுஷ்கோடிக்கு ரூ. 50 கோடியில்  சாலை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்க  மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மாவட்ட தொழில் மையம்  மூலம் நடப்பாண்டில் புதிய தொழில்கள் தொடங்கிட ரூ.19.37 கோடி திட்ட மானியம்  வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் மிளகாய் குழுமத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு  தொழில்கள் மேற்கொள்ள ரூ.22.41 கோடி மானியம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.  அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி தொழில் தொடங்குவதற்கு தொழில் முனைவோர்கள்  முன்வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். முகாமில் அன்வர்ராஜா எம்.பி., முருகன்  எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு நிலவள  வங்கித் தலைவர் தர்மர், ராமநாதபுரம் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களின் சங்கத் தலைவர் பாண்டியன், கனரா வங்கி மேலாளர் காந்தி மற்றும்  தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். 

செய்தி: தினகரன்

No comments :

Post a Comment