(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 26, 2015

காமராஜர் மற்றும் பேரறிஞர் அண்ணா விருதுகளுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :


தமிழக மக்களுக்கு சேவை செய்து வருபவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்விருதினைப் பெற விரும்புவோர், ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இதற்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு, ஆட்சியர் க. நந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்

No comments :

Post a Comment