(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 4, 2015

மதுக்கடைகளை மூடக்கோரி பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் கைது!!

No comments :
பரமக்குடியில் மதுக்கடைகளை மூடக்கோரி பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

திடீர் போராட்டம்:

பரமக்குடியில் அனைத்து மதுக்கடைகளையும் தமிழக அரசு மூட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர் தேசிய முன்னணி, த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நேற்று திடீரென நடைபெற்றது. இதனால் ஐந்துமுனை பகுதியில் உள்ள மதுக்கடை அடைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. 


பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் தேசிய முன்னணி இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பசுமலை, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது இக்பால், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் அகமது கபீர், மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்க நிறுவனர் முத்துக்குமார், மாவட்ட ஆலோசகர் வக்கீல் லிங்கமூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி மாநில பொறுப்பாளர் இளங்கோ, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பீட்டர் வளவன், வைகை பாசன சங்க மாவட்ட தலைவர் மதுரைவீரன் உள்பட பலர் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரியும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் பேசினர்.

கைது: 

பின்னர் அவர்கள் ஐந்துமுனை பகுதியில் இருந்து மதுக்கடையை நோக்கி ஊர்வலமாக சென்று பூட்டுப்போட முயன்றனர். அப்போது அவர்களை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி அவர்கள் மதுக்கடைக்கு பூட்டுப்போட முயன்றபோது அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment