(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 22, 2015

செவிலியர் வேலை வாங்கித்தருவதாக ரூ.8.45 லட்சம் மோசடி!!

No comments :
கிராமப்புற செவிலியர் வேலை வாங்கித்தருவதாக ரூ.8.45 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

ராமநாதபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன் என்ற தமிழ் முருகன். இவருக்கும் பார்த்திபனூர் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த வீரன் மகன் பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புற செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன; எனக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் நெருக்கம் உள்ளது; அவர்கள் மூலம் வேலைவாங்கித் தருகிறேன், ஆட்களை தயார் செய்து பணம் வசூலித்துக் கொடுங்கள் என பிரகாஷ், தமிழ்முருகனிடம் கூறியுள்ளார். 

அதன்படி தமிழ் முருகன் தனது நண்பர்கள் 3 பேர் மூலம் பலரிடம் ரூ. 8.45 லட்சம் வசூலித்து கடந்த 27.3.15ல் பிரகாஷிடம் வழங்கியுள்ளார். பல மாதங்கள் ஆகியும் வேலைவாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டதற்கும் கொடுக்கவில்லை. பிரகாஷ், அவரது மனைவி காளியம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் தன்னை மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் தமிழ் முருகன் புகார் அளித்தார். 

எஸ்.பி., மயில்வாகனன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து, பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

செய்தி: தினகரன்


No comments :

Post a Comment