(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 11, 2015

மதுவுக்கு எதிராக ராமநாதபுரம் அரண்மனை முன் திமுக போராட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அரண்மனை முன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. குருவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமைச் செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா.ரகு, ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், நகர் செயலர் கார்மேகம், கீழக்கரை திமுக நகர் தலைவர் திரு. பஷீர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மதுவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


No comments :

Post a Comment