(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 22, 2015

கீழக்கரை அருகே கோவில் உண்டியலை திருடி கிணற்றுக்குள் வீசிச்சென்ற மர்ம நபர்கள், போலீஸ் விசாரணை!!

No comments :
கீழக்கரை அருகே உள்ளது புல்லந்தை கிராமம். இந்த ஊர் நாடார் ஊருணியில் நேற்று காலை வாலிபர்கள் பிரசாந்த், சுரேஷ், கணேஷ்குமார், சந்திரசேகர் ஆகியோர் குளிக்கச்சென்றனர். 
ஊருணியில் தண்ணீர் இல்லாததால் அங்குள்ள சமுதாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் வாலிபர்களின் காலில் பொருள் ஒன்று தட்டுப்பட்டது.இதையடுத்து அனைவரும் அதனை வெளியில் எடுத்து பார்த்தனர். அப்போது அது கோவில் உண்டியலாக இருந்ததால் அதனை திருடர்கள் யாராவது திருடிவந்து கிணற்றுக்குள் வீசிச்சென்றிருக்கலாம் என்று கருதினர். இதைத்தொடர்ந்து உண்டிலை மேலே கொண்டு வந்து பார்த்தபோது அதில் கொம்பூதி கோகுலகண்ணன் கோவிலுக்கு சொந்தமான உண்டியல் என்று எழுதப்பட்டு இருந்தது.

கடந்த 13–ந்தேதி அந்த கோவிலில் உண்டியல் திருடப்பட்டு உள்ளது. இந்த உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடிக்கொண்ட மர்ம நபர்கள் ஊருணியில் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த உண்டியல்தான் தற்போது வாலிபர்கள் குளிக்கும்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த ஏர்வாடி போலீசார் அங்கு சென்று உண்டியலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment