(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 25, 2015

ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம், ட்ரான்ஸ்ஃபரை ரத்து செய்ய வலியுறுத்தல்!!

No comments :



மூன்று விஏஓக்களை கோட்டம்விட்டு கோட்டம் மாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி விஏஓக்கள் ராமநாதபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்களை(விஏஓ) பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு விஏஓ.,க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாலையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீராச்சாமி, பொருளாளர் பாலகிருஷ்ணன், கோட்டச் செயலாளர் தர்மர், மாவட்ட செய்தி தொடர்பாளர் சைபுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 


சாயல்குடி விஏஓ நல்லமருது, இளஞ்செம்பூர் விஏஓ ஐயப்பன், கீழத்தூவல் விஏஓ தினேஷ்பிரபு ஆகியோர் பரமக்குடி கோட்டத்திலிருந்து ராமநாதபுரம் கோட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களது மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; பணிபுரிந்த கிராமத்தில் மீண்டும் பணியமர்த்த வேண்டும்; கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வெளியிடப்பட்ட அரசாணை மூலம் பதவி உயர்வை வழங்க வேண்டும்;

விரைவுப்பட்டா மாறுதல் அரசாணை எண்.210ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்; 2009-10ம் ஆண்டு நெற்பயிர் காப்பீடு தொடர்பாக பூக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 100 சதவீதம் தணிக்கைக்கு பிறகும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாலகிருஷ்ணன், முனியசாமி ஆகியோர் மீது துறை ரீதி நடவடிக்கை, குற்றவழக்கு பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்; கீழக்கரை வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா என்பவருக்கு 3 ஆண்டுகள் வருடாந்திர ஊதிய உயர்வை பிடித்தம் செய்யுமு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செய்தி: தினசரிகள்

No comments :

Post a Comment