(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 27, 2015

கீழக்கரை அருகே குடும்பத்தகராறில் ஒருவர் தீக்குளிப்பு!!

No comments :
கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கணேசன் (34). இவர், தினமும் குடிபோதையில் மனைவி காளிமுத்துவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மனைவியை பயமுறுத்துவதற்காக கணேசன் தனது உடலில் தீ வைத்துக் கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக உடலில் தீப்பற்றி படுகாயமடைந்த கணேசன், சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, அவரது மனைவி காளிமுத்து அளித்த புகாரின்பேரில், திருப்புல்லாணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாதேசிங்கு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment