(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 31, 2015

கீழக்கரையில் சமூக நல நுகர்வோர் சேவை இயக்க கூட்டம், சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ‘அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்’ என பெயரிட கோரிக்கை!!

No comments :

சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்என பெயரிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கீழக்கரையில் சமூக நல நுகர்வோர் சேவை இயக்க கூட்டம் நடைபெற்றது. இயக்க தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில், பாம்பன் பாலத்தை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்; ராமேஸ்வரம்-சென்னைக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தினசரி ரயில் இயக்க வேண்டும்; மீனவர்கள் நலன் கருதி மீன் பாதுகாப்பாக ரயில்களில் கொண்டு செல்ல குளிர்பதன பிரத்யேக ரயில் பெட்டி அனைத்து ரயில்களிலும் இணைக்க வேண்டும்; பாம்பன் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்; 


சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ்என்ற பெயரிட வேண்டும்; கீழக்கரை முதல் கேணிக்கரை வரை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் தற்போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரையே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். இந்த பஸ்களை மீண்டும் பழைய வழித்தடப்படி இயக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இபுராகீம், செய்யது சர்புதீன், கலைச்செல்வம், முகம்மது யூசுப், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சங்கச் செயலாளர் தங்கம் அப்துர்ரஹ்மான் நன்றி கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment