(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 8, 2015

ராகிங் புகார் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவு!!

No comments :
ல்லுாரி மற்றும் பல்கலைகளில், ராகிங் புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைவேந்தர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின், ராகிங் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மாநில அறிவுரை குழு கூட்டம், கவர்னர் ரோசய்யா தலைமையில் நேற்று நடந்தது. இதில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா மற்றும் உயர்கல்வி மன்றத்தினர் பங்கேற்றனர்.


ராகிங்கை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை, விழிப்புணர்வு பிரசாரம் போன்றவை குறித்து, துணைவேந்தர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ராகிங் தொடர்பாக எந்த கல்லுாரியிலிருந்து புகார் வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், உயர்கல்வித்துறை அதிகாரிகளின் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம், அமைச்சர் பழனியப்பன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இதில், கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை, பேராசிரியர் காலியிட விவரம், பணி மாறுதல், கல்லுாரி கல்வி இயக்கக பிரச்னை மற்றும் அரசு கல்லுாரி மாணவர்களின் மது விலக்கு போராட்டம் போன்றவை குறித்து விரிவாகவிவாதிக்கப்பட்டது.


No comments :

Post a Comment