(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 26, 2015

தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி விற்பனை!!

No comments :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது.    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணங்களில், பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார் மற்றும் வெண்பட்டு சேலைகள் ஆகியன தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும், இயற்கையான ஆர்கானிக் புடவை ரகங்களும் வந்துள்ளன. பாரம்பரிய முறையில் கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள் ஆகியனவும் விற்பனைக்கு உள்ளன.   தொடர்ந்து, ஆண்களுக்கு ஏற்ற லினன் சட்டைகள், பருத்தி சட்டைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வந்துள்ளன.   கடந்த ஆண்டு ரூ. 143.68 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. நடப்பு ஆண்டில் ரூ. 92 லட்சமும், அடுத்த ஆண்டில் ரூ. 1.73 கோடியும் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டுக்கான சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.


விழாவுக்கு, கோ-ஆப்டெக்ஸ் மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி, முதுநிலை மேலாளர் கோ. அன்பழகன், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், டி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ஏற்பாடுகளை, உதவி விற்பனையாளர் கே. பாண்டியம்மாள் செய்திருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment