Tuesday, September 22, 2015
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.20 லட்சம் மோசடி!!
இராக் நாட்டில்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.20
லட்சம் மோசடி
செய்த முகவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இராக்கில் இருப்பவர்களை சொந்த ஊருக்கு
திரும்ப அழைத்து வருமாறும் கமுதி அருகே பாக்குவெட்டியை சேர்ந்த
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாக்குவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களான பொன்னுச்சாமி மகன்
ராஜேந்திரன்(27), திருமால் மகன் சசிக்குமார் (25), நல்லையன் மகன் தங்கம்(40)
மற்றும் கமுதி
அருகே கடம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் கோபால்சாமி (22) ஆகிய 4 பேரும் ஈராக் நாட்டுக்கு கட்டடத் தொழில் செய்ய அதே
பாக்குவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு முகவரிடம் தலா ரூ.1.55 லட்சம் வீதம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அவர் பணத்தைப் பெற்றுக்
கொண்டு 4 பேரையும்இராக் நாட்டில் தஸ்ரதா என்ற
இடத்துக்கு வேலைக்கு அனுப்பி வைத்தாராம். ஆனால் அங்கு அவர்களுக்கு எந்த வேலையும்
தராமல் தங்க வைத்திருப்பதுடன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அந்த முகவர்
ஏமாற்றி வருவதாகவும், எனவே அந்த 4 பேரையும் சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்றும், முகவரிடம் கொடுத்த தொகை ரூ.6.20 லட்சத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்
என்றும்
தங்கத்தின்
சகோதரர் மூர்த்தி, கோபால்சாமியின் சகோதரர்
ஜி.சத்தியேந்திரன், ராஜேந்திரனின் தந்தை பொன்னுச்சாமி, சசிக்குமாரின் தந்தை திருமால் ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமாரிடம்
புகார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment