(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 14, 2015

உச்சிப்புளி அருகே பெட்ரோல் குண்டுவீச்சு!!

No comments :
உச்சிப்புளி அருகே நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீசி தாக்கியதில் 3 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ளது சேர்வைக்காரன் ஊரணி (மேற்கு) கிராமம். கடந்த 10-ந்தேதி இதே ஊரைச்சேர்ந்த அமர் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஒரு பெண்ணின் மீது மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் தாய்மாமன் கனகராஜ், அமரை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சிப்புளி போலீசார் விசாரித்தனர். 

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளுடன் கிராமத்திற்குள் புகுந்து நபர்கள் சிலர், அமுதாவுக்கு சொந்தமான குடிசை வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். 


இதனால் குடிசையில் தீப்பிடித்து அருகில் இருந்த கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் 3 வீடுகளும் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். 

முத்துலட்சுமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரை, ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 

நள்ளிரவில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் வீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 


வீடு தீப்பிடித்ததில் கார்மேகம் தனது மகள் திருமணத்துக்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த ரூ.லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அவர் அளித்த புகாரின் பேரில் 25 பேர் மீது உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அமர் தரப்பைச் சேர்ந்த முத்துச்சாமி, பூமிநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment