(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 25, 2015

ஷார்ஜாவில் சர்வதேச புத்தககண்காட்சி நவ 4ம்தேதி தொடங்கி 14ந்தேதிவரை நடைபெறுகிறது!!

No comments :
ஷார்ஜாவில் ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நவ 4ம்தேதி தொடங்கி 14ந்தேதிவரை சர்வதேச புத்தககண்காட்சி நடைபெறுகிறது.இந்த கண்காட்சி 34வது ஆண்டாக நடைபெறுகிறது.
இதில் 64 நாடுகளை சேர்ந்த 1502 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியில் 15லட்சம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. 

மேலும் 210 மொழிகளில் இந்த புத்தகங்களை இடம் பெறும்.
சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் சேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிம் வழிகாட்டுதலில் நடைபெற உள்ளது.இதில் 890 உள்ளூர் மற்றும் அரபு புத்தக விற்பனையாளர்களும் 433 வெளிநாட்டு புத்தக நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இந்த புத்தக கண்காட்சியையோட்டி 900 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

11
நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 110 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட கல்வியாளர்கள் பலர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment