(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 18, 2015

ராமநாதபுரம் அதிமுக மா.செ திரு. ஆர்.தர்மருக்கு உற்சாக வரவேற்பு!!

No comments :
ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசிபெற்று புதன்கிழமை பரமக்குடி வந்த ஆர்.தர்மருக்கு அக்கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கட்சிப்பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி. கட்சித் தொண்டர்களின் கோரிக்கைகளை தலைமைக்கு எடுத்துக்கூறி தேவையான உதவிகளைச் செய்வேன்.

ஜெயலலிதா அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி, இலவச பேருந்து பயணம் என 14 வகை நலத்திட்ட உதவிகள், பசுமை வீடுகள் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேரு நிதி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விலையில்லா கறவை மாடுகள், முதியோர் உதவித்தொகை, பட்டம் படித்த பெண்களுக்கு ரூ 50 ஆயிரத்துடன் தாலிக்குத் தங்கம், விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், அம்மா உணவகம், சூரிய மின்சக்தி திட்டம், கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் என இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் நிறைவேற்றாத எண்ணற்ற பல முன்னோடி திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து வீடுகளுக்கும் தொண்டர்களுடன் சென்று எடுத்துக்கூறுவேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளும் அதிமுகவுக்கு வெற்றித்தொகுதிகளாக மாற்றுவேன் என கூறினார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment