(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 9, 2015

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் எண்-1 புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது!!

No comments :
பாம்பன், ராமேசுவரம் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசி வருவதால், பாம்பன் துறைமுக அலுவலகத்தில் எண்-1 புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், பாம்பன், ராமேசுவரம் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசி வருகிறது. இதனால், கடலில் பெரிய அலைகள் உருவாகி, கரையில் ஆக்ரோஷமாக மோதுகின்றன. பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

எனவே, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் எண்-1 புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என, துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு: ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசி வருதால், இப்பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான நாட்டுப் படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமேசுவரம், மண்டபம் மீன்துறை அதிகாரிகள் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர். மேலும், படகுகளை பாதுகாப்பாக கடலில் நிறுத்தி கண்காணிக்குமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தினர். எனவே, மீனவர்கள் தங்களது படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment