(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 5, 2015

ராமநாதபுரத்தில் நகரப் பேருந்துகளை வழக்கம் போல அரண்மனை பகுதியில் நிறுத்த கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரத்தில் நகரப் பேருந்துகளை வழக்கம் போல அரண்மனை பகுதியில் நிறுத்தாமல் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த இரு வாரங்களாக நிறுத்துவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் நகரில் அரண்மனை பகுதியிலிருந்து நகரப் பேருந்துகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. இப்பேருந்துகள் கடந்த இரு வாரங்களாக நகரில் பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரண்மனைப் பகுதிக்கு தினசரி வந்து செல்லும் விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் அரண்மனையிலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து, பின்னர் அவர்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் வீணாவதுடன், கூடுதல் செலவும் ஆகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். 

எனவே, முன்பு போலவே நகரப் பேருந்துகள் அனைத்தையும் அரண்மனையிலிருந்தே இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் விரும்புகின்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தின் தலைவர் பா.ஜெகதீசன் கூறியது:  நகரின் மையப் பகுதியாக உள்ள அரண்மனை பகுதியில் நகரப் பேருந்துகள் நின்று செல்ல பேருந்துகள் நிலையம் ஒன்றை அமைக்கலாம்.

ராமநாதபுரம் நகரில் அரண்மனைப் பகுதியில், அலங்காச்சேரி தெருவில், கால்நடை மருத்துவமனைக்கு அருகில் அரசுக்கு சொந்தமான காலியிடத்தில் நகரப் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யலாம் என்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment