(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 21, 2015

ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயரிழப்பு!!

No comments :
ராமநாதபுரத்தில் அடுத்தடுத்து இரு இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருவர்உயரிழந்தனர்.  

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் தனியார் ஜவுளிக்கடையில் பணி செய்து வருபவர் சாத்தையா மகன் சோனைமுத்தன் (34). ராமநாதபுரம் பட்டரைக்காரத் தெருவில் வசித்து வரும் அப்துல்மஜீத் மகன் கமருதீன் (31). இந்த இருவரும் சேர்ந்து ஜவுளிக்கடையின் பெயர்ப் பலகையை கடையின் முன்புறத்தில் மாற்ற முயன்ற போது அருகில் இருந்த உயரழுத்த மின்கம்பி உரசியது.  இதில் மின்சாரம் தாக்கி கமருதீன் (31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சோனைமுத்தன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அவர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மற்றொரு சம்பவம்: ராமநாதபுரம் அருகே   பெருங்குளம் மேற்குத்தெருவில் வசித்து வந்ததவர் வடிவேல் (52). கட்டடத் தொழிலாளியான இவர்  மின்சாரக் கசிவு இருப்பது தெரியாமல் வீட்டில் உள்ள சுவிட்சைப் போட முயன்றுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.


இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment