(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 19, 2015

ராமேஸ்வரம் கோயிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரிக்கை!!

No comments :

ராமேஸ்வரம் கோயிலில் கட்டண தரிசனம் நீட்டிக்க பட்டுள்ளதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இவர்களுடன் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதுகிறது. இந்நிலையில் மார்கழி 1(டிச., 17) முதல் கோயில் நடை அதிகாலை 2.30 மணிக்கு திறந்து பள்ளியறை பூஜை முடிந்ததும், காலை 3.30 முதல் 5 மணி வரை கட்டணத்துடன் (ஒரு நபருக்கு ரூ. 50) கூடிய ஸ்படிகலிங்க பூஜை நடக்கும்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களாக ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்த தால், ஸ்படிகலிங்க தரிசன நேரம் காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய வழியில்லாத பக்தர்கள் அதிகநேரம் காத்திருந்து அவதிக்குள்ளா கின்றனர். நேற்று மட்டும் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 2 மணி நேரம்வரை காத்திருந்ததனர். முதியவர்கள் பலர் வரிசையில் நிற்க முடியாமல் அவதிப் பட்டனர். கூட்ட நேரிசலை சமாளிக்க முடியாமல் தனியார் (செக்யூரிட்டி) காவலர்கள் திணறினர்.


கட்டண தரிசனத்திற்கு கோயில் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பதால், ஏழை பக்தர்கள் பாதிப்பதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியதாவது: ஸ்படிகலிங்க தரிசனம் 1 மணி நேரம் தான் நடக்கும். ஆனால் வணிக நோக்கத்துடன் பக்தர்களிடம் ரூ.50 கட்டணம் வசூலிப்பதற்காக 2 மணி நேரம் வரை தரிசனம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கட்டண தரிசனத்தை ரத்து செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும், என்றார்.

செய்தி: தினசரிகள்
   
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment