முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 8, 2015

கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் கூட்டம்

No comments :
கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் நிறுவனர் பி.எஸ். அப்துர்ரஹ்மான் நினைவாக இந்த அனைத்து ஜமாஅத் கூட்டம் நடந்தது. இதற்கு நடுத்தெரு ஜமாஅத் தலைவர் கியாதுதீன் தலைமை வகித்தார்.
நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா, உதவித் தலைவர் ஹாஜாமுகைதீன், பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், மக்கள் சேவை அறக்கட்டளைத் தலைவர் உமர்அப்துல்காதர், கைராத்துன் ஜலாலியா பள்ளி தாளாளர் சாதிக், தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சி.எஸ்.ஐ. சர்ச் சபை குரு தேவதாஸ் ராஜன்பாபு, காங்கிரஸ் பிரமுகர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன்அலி, த.மு.மு.க. தலைவர் சிராஜூதீன், விஸ்வகர்மா சங்கத் தலைவர் சி.கே. வேலன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயலர் அப்துல்ஹமீது ஆகியோர் இரங்கல் தெரிவித்து பேசினர்.

முன்னதாக அனைத்து ஜமாஅத் நிர்வாகி முகைதீன்தம்பி வரவேற்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல்காதர், உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க செயலர் அப்துல்மாலிக், சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக்தாவூத்கான், தங்கம் அப்துர் ரஹ்மான், செய்யது இபுராகீம், அப்பாஸ் ஆலிம், நகர் நல இயக்க பிரமுகர் சேக்பசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் சீதக்காதி அறக்கட்டளை செயலர் காலித் ஏ.கே. புஹாரி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசு ஹாஜி காதர்பக்ஸ் ஹூசைன் துஆ செய்தார்

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா 34ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா – பேராசிரியர் திரு.ஜவாஹிருல்லாஹ், MLA பங்கேற்று சிறப்பித்தார்.

No comments :
கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியின் 34ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் பேராசிரியர் திரு.ஜவாஹிருல்லாஹ், MLA பங்கேற்று சிறப்பித்தார்.
  

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா 34ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நேற்று 7-2-2015 அன்று நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சியைச்சேர்ந்த, இராமநாதபுர சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் திரு.ஜவாஹிருல்லாஹ், பங்கேற்று சிறப்பித்தார்.
கீழக்கரை நகர் மன்ற தலைவி, திருமதி.ராபியத்துல் காதிரியா, பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கு கொண்டு வாழ்த்தினர்.






பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில் சட்டமன்ற உறுப்பினர் நிதி தொகையிலிருந்து கல்விக்காகவே அதிகமாக செலவிடப்பட்டதை சுட்டிக்காட்னார். கீழக்கரை மக்தூமியா, இஸ்லாமியா பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட நிதியையும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவில், 10ம் மற்றும் 12ம் வகுப்பு சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் சார்பாக ரொக்க்கப்பரிசும் வழங்கப்பட்டது.

செய்தி: திரு. இர்ஃபான், தமுமுக

ஷார்ஜாவில் Soft ware engineer வேலை வாய்ப்பு

No comments :
Business Unit
GEMS EDUCATION-CORPORATE OFFICE
Job RefNo
5825
Job Title
Development Software Engineer
Job Type
Non-Teaching
Job Description

Founded in 1959 GEMS Education is an international K – 12 Education Company. Its vision is to be the world’s leading provider of quality education, enriching the lives of millions of children and the communities in which they live. GEMS Education works across both the Private and Public sectors. In the Private sector the company is the largest kindergarten to grade 12 education providers in the world. It educates 142,000 students from over 150 nationalities across four continents. GEMS employs over 11,000 education professionals, specialists and staff from over 80 countries. In the Public sector GEMS Education works with governments to lift school performance and improve the standards and expertise of government schools across the globe. The Varkey GEMS Foundation was established in 2010 as an independent, not-for-profit charity. Its aim is to impact 100 underprivileged children for every child enrolled in a GEMS school. The Honorary Chair of the Foundation is former US President, Bill Clinton. GEMS have offices in the United Kingdom, Switzerland, the United States of America, Singapore, India, The Kingdom of Saudi Arabia, Qatar, Kenya, Egypt and the United Arab Emirates.

The Post:  Development Software Engineer
  • Develops software solutions by studying information needs; conferring with users; studying systems flow, data usage, and work processes; investigating problem areas; following the software development lifecycle.
  • Determines operational feasibility by evaluating analysis, problem definition, requirements, solution development, and proposed solutions.
  • Presenting ideas for system improvements
  • Working closely with analysts, designers and database administrators
  • Protects operations by keeping information confidential
  • Evaluate and test new or modified software programs and software development procedures used to verify that programs function according to user requirements and confirm to established guidelines.                 
 The Requirements: 
  • Minimum 3 - 5 years’ experience in the areas of system analysis, design & development and maintenance of ERP Applications with strong knowledge in the Finance domain.
  • A graduate in Computer Science (BE / B Tech) or equivalent. Specialized IT certifications will be an added advantage.


Application Process
If you meet these criteria and have the drive and passion to support the continued growth of the GEMS Group then we would very much welcome your application via the GEMS Education website at www.gemseducation.com/careers
Qualification
Bachelors
Location
UAE
Driving Licence Required
No
Department
IT

Role

கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் ஊட்டச் சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

No comments :
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் குணசேகரி, திருப்புல்லாணி ஒனறிய குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் தாஜூனிஷாபேகம், கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் மனை யியல் துறை பேராசிரியர்கள் முத்துமாரி, புவனேஷ்வரி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆனந்த் ஆகியோர் பேசினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விமலி வரவேற்றார்.

குழந்தைகள், வளரிளம் பெண்கள், இளம் பெண்கள், முதியோர்களுக்கான உணவூட்டமுறை மற்றும் வளர்ச்சி குறித்து விளக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சத்தான உணவுகள், தானிய வகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் குறித்த விளக்கக் குறும்படம் காண்பிக்கப்பட்டது. 
துரித உணவுகளால் ஏற்படும் தீங்குகளான அஜீரண கோளாறுகள், ஒவ்வாமை, குடல் நோய்கள், குடல் புற்று நோய்களின் அறிகுறிகள், விளைவுகள் குறித்தும் விளக்கப்பட்டது. வைட்டமின், புரம், தாது உப்புகள் குறைபாடுகளால் ஏற்படும் குவாஷியார்க்கர், மராஸ்மஸ் போன்ற நோய்களும், ரத்தச்சோகை மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கூறப்பட்டது. மாணவியரின் உணவூட்டம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முகம்மது இபுராகீம் நன்றி கூறினார்.

சென்னை-ராமேஸ்வரம் இடையே பகல்நேர அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்- தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

No comments :
ராமநாதபுரம், : சென்னை-ராமேஸ்வரம் இடையே பகல் நேர அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இம்மாத இறுதியில் ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை யொட்டி ரயில்வே அமைச்சகம் தனது இணையதளம் மூலமாக ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்துள்ளது. 

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. அதில் மதுரை ராமேஸ்வரம் மார்க்கத்தில் நான்கு செட் வண்டிகள் பகல் நேரத்தில் இயக்கப்பட்டது. தற்போது 2 செட் வண்டிகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள்
அவதிக்குள்ளாகி வருகின்றனர். கட்டணம் குறைவு மற்றும் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ரயில்களை கூடுதலாக இயக்காமல், குறைந்தளவில் 2 செட் ரயில்களே இயக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கிறோம். இம்மார்க்கத்தில் குறைந்தது 5 செட் வண்டிகளாவது இயக்க வேண்டும். 


டெமோ என்ற டீசல் எலக்ட்ரோ மெசின் கோச் பெட்டிகளை இணைத்து இவ்வழித்தடத்தில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களை இரு மார்க்கங்களிலும் காலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து இயக்கினால் நல்ல வரவேற்பும், ரயில்வேக்கு நல்ல வருமானமும் கூடுதலாக கிடைக்கும். சென்னை-ராமேஸ்வரம் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு செட் விரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாலும், டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே இவ்வழித்தடத்தில் பகல்வேர அதிவிரைவு ரயில் தினசரி இயக்க வேண்டும். மானாமதுரை வரை வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயிலையும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம், ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினகரன்

தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மின் விளக்குகள் அமைக்க கோடிக்கை.

No comments :
தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மின் விளக்கு இல்லாததால் திருட்டு சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளி மைதானத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கணினி அறை, பரிசோதனை அறை (லேப்) உள்ளிட்ட பல அறைகள் உள்ளன. 

இங்கு மின்சார வசதி இருப்பினும் பள்ளி முடிந்து இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இருட்டாக உள்ளது. இது திருட்டு சம்பவத்திற்க்கு வழிவகுக்கும் என்பதால் இப்பள்ளி மைதானத்தில் விளக்குகள் அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.