முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 21, 2015

வளைகுடா நாடுகளில் புழுதிப்புயல் - படங்கள்

No comments :
வளைகுடா நாடுகளில் குறிபாக அமீரகத்தில் இன்று புழுதிப்புயல் வீசியது.
இதன் காரணமாக வாகனஓட்டிகள் எச்சரிக்கப்பட்டனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த நிலை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஷார்ஜா ‘கார்னிச்’ பகுதிகளில் மிதமான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

சீட்தோஷ்ன நிலைமாறுதலுக்கேற்ப இந்த புழுதிப்புயல் ஏற்பட்டிர்க்கிறது என்றும், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்லவும், எச்சரிக்கப்படிருக்கின்றனர்.




வெப்பநிலை குறையும் என்றும் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

படங்கள்; கல்ஃப் நியுஸ்

ராமேசுவரம் ரயிலில் கொள்ளை

No comments :
பயணிகள் கவனத்திற்கு!!!!

தேவகோட்டை அருகே எழுவன்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா(70). இவர் தேவகோட்டை ரஸ்தாவில் ரயில் வந்தபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். சகபயணிகள் கொடுத்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் கருப்பையாவை தேவகோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் பத்து மணி நேரத்திற்கு பிறகு அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 

அப்போது கருப்பையா கூறுகையில், முன்பதிவு இல்லாத பெட்டியில் சென்னையில் இருந்து நான் வந்து கொண்டிருந்தேன். எனது அருகில் தாய்,மகள்,கணவன் மனைவி உட்பட ஆறுபேர் பயணித்தனர். அதில் ஒருவர், நாங்கள் கோவையில் இருந்து வருகிறோம், ராமநாதபுரத்தில் பெயின்ட் அடிக்கும் பணிக்கு செல்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டார். 
இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தோம். விழுப்புரம் உட்பட இரண்டு ஊர்களில் அவருடன் சேர்ந்து தேநீர் குடித்தேன். தஞ்சாவூரில் அந்த நபர் எனக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். 

சிறிது நேரத்தில் தான் மயங்கிவிட்டேன், என்றார். தற்போது மோதிரங்கள் ,சூட்கேசில் இருந்த பொருட்கள் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை என்றார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


செய்தி மூலம்; தினசரி நாளிதழ்கள்

உச்சப்புளி அருகிலுள்ள கேரள வேன் விபத்துக்குள்ளாகியது

No comments :
உச்சப்புளி அருகிலுள்ள அரியமான் பஸ் நிறுத்தத்தில் கேரள வேன் விபத்துக்குள்ளாகியதில் 3 பேர் உயிரிழப்பு , 8 பேர் படுகாயம் மீட்பு படையினருடன் தங்கள் பணிகளை திறம்பட செய்தனர் ,
குறிப்பாக படுகாயமடைந்து உயிருடன் சிக்கிக்கொண்ட ஒட்டுனரை காப்பாற்ற பாம்பன் உராட்சி தலைவர் பேட்ரிக் மற்றும் ராஜ்குமார் , சதிஸ் உள்ளிட்ட தோழர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.


செய்தி; நல்லதம்பி சேவியர், முஹம்மது நெய்னா

சவூதி அரேபியாவில் ISF நடத்திய SDPI சிறப்பு நிகழ்ச்சி

No comments :
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) இன் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்களின் ரியாத் வருகையை முன்னிட்டு இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) ரியாத் தமிழ் மாநிலக்கமிட்டி வரவேற்ப்பு நிகழ்ச்சி மற்றும் தமிழ் பிரமுகர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சி கடந்த 18-02-2015, புதன்கிழமை மாலை 8:30 மணியளவில்,ரியாத் லீராயல் அரங்கில் நடைபெற்றது, இந்தியன் சோசியல் ஃபோரம், ரியாத் மத்தியக்கமிட்டி பொதுச்செயலாளர் ரமுஜுதீன் அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து ஏற்ப்புரையாற்றிய SDPI மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் இந்தியாவின் கடந்த கால வரலாற்றையும் அதில் முஸ்லிம்களின் நிலைகளையும், நிகழ்கால அரசியல் மாற்றத்தையும் அதில் SDPI யின் களப்பணிகளையும் தெள்ளத்தெளிவாக பட்டியல் இட்டுக்காட்டினர்கள். SDPI யின் அரசியல் நிலைபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இறுதியாக ISF ரியாத் தமிழ் மாநிலக்கமிட்டி பொதுச்செயலாளர் சர்தார் நன்றி நவிழ நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்தி; இந்தியன் சோசியல் போரம்

கீழக்கரையில் புதிய உதயம் ”நூர் கூல் பாயிண்ட்’

No comments :

கீழக்கரையில் புதிய உதயமாக இன்று 20.02.2015. மதியம் 2.00 மணியளவில் சேகு அப்பா சாலையில் பாபு ஆட்டோ ஸ்டான்ட் அருகில் ”நூர் கூல் பாயிண்ட்’அருண் ஐஸ் கிரீம் கடை திறக்கப்படஉள்ளது .
இக் கடையில் மொத்தமாகவும் சில்லறை விற்பனையும் உண்டு ,திருமணத்திற்கு தேவையான ஒரு லிட்டர் தண்ணிர் பாட்டில் அரை லிட்டர் தண்ணிர் பாட்டில் மற்றும் குளிர் பானங்கள் கிடைக்கும்.
இன் நிறுவனம் சிறந்து விளங்க கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது
செய்தி; கீழக்கரை நகர் நல இயக்கம்