முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 4, 2015

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பங்குபெற்ற திருப்புல்லாணி நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

No comments :
திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் பங்கேற்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி ஒன்றியத்தில் அரசு உதவிபெறும் மேதலோடை நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளியில்
இப்பள்ளியின் 30 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நாடார் மஹாஜன சங்க பள்ளியின் நிர்வாக இயக்குனர் திரு.D,பால்பாண்டி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாடார் மஹாஜன சங்க பள்ளியின் தாளாளரும் செயலாளருமான திரு.M.ஜெயக்குமார் B.E., அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்கண்ணு M.A, M.Ed., அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.V.சாந்தி M.A, M.Ed., அவர்களும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.S.ஜெஸிந்தா M.A., M.Ed., அவர்களும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் கலந்து கொண்டு இப்பள்ளியின் அறிவியல் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசும்போது எனது ராமநாதபுரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்.12.00 ( பணிரெண்டு லட்சம் ) செலவில் இப்பள்ளிக்கு அறிவியல் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் இப்பகுதியில் மட்டுமின்றி சட்டமன்ற தொகுதி முழுவதும் கல்வி நிலையங்களுக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய்.1,68,000,00.00 ( ஒரு கோடியே அறுபத்தி எட்டு லட்சம் ) இதுவரையிலும் கல்வி மேம்பாட்டுக்காக நிதி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்கள்.
இப்பள்ளியின் முன்னாள் தாளாளரும் பாண்டியனார் தொழிற் சங்க தலைவருமான வேதாளை திரு.S.சதாசிவம் அவர்கள் கூறும்போது இதுவரை எத்தனையோ மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் கண்டுள்ளோம் ஆனால் இப்பள்ளியை யாரும் ஏறெடுக்காத நிலையில்
நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி கோரிக்கை மனு அளித்தபின் அதை கனிவோடு பரிசீலித்து இன்று நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினரின் தன்னலமற்ற சேவைகளையும் பணிகளையும் மிகவும் பாராட்டி அதற்காக நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இந்தநிகழ்வில் நாடார் மஹாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல் ராஜ் அவர்களும், ராமநாதபுரம் & சிவகங்கை மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சம்மேளன பெருந்தலைவர் திரு.S.பாலசிங்கம் அவர்களும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களும், இப்பள்ளியின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியபெருமக்கள், உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் சகோ.B.அன்வர் அலி, பக்கர் அலி, நூருல் அஃப்பான்,
திருப்புல்லாணி ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.
முடிவில் இப்பள்ளியின் கமிட்டி உறுப்பினர் திரு.R.மாணிக்கம் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

செய்தி; MLA அலுவலகம், இராமநாதபுரம்

துபாய் Al Bustan Centre & Residence -ல் வர்வேற்பாளர் பணி வாய்ப்பு

No comments :
Al Bustan Centre & Residence, Dubai, UAE is inviting applications for the position of Front Desk Clerk (Receptionist) from suitably qualified & experienced candidates. Candidates should be pleasant, friendly & service oriented with a minimum of 1 year experience as Guest Service Agents / Receptionist in 4 -5 star hotel with sound experience in working on Fidelio / Opera systems. Attractive basic salary, accommodation, medical, meals, uniforms, 30 days paid annual leave, transportation, return ticket to home country every 24 months are available for selected candidates.

Other Information
 • Contract Type : Permanent Staff
 • Last Application Date : Monday, March 30, 2015

துபாய் -ல் IT Assistant பணி வாய்ப்பு

No comments :
Dubai
 • Maintain computer hardware and software
 • Perform preventive maintenance for all the computers
 • To keep records for users data
 • Format / install new laptop for users
Desired Candidate Profile

 • 2 years computer maintenance experience with IT department
 • High School degree certificate
 • Must be fluent in English. Arabic is an advantage
 • Maintain computer hardware and software
 • Perform preventive maintenance for all the computers
 • To keep records for users data
 • Format / install new laptop for users
Desired Candidate Profile

 • 2 years computer maintenance experience with IT department
 • High School degree certificate
 • Must be fluent in English. Arabic is an advantage

புதுமடத்தில் தமுமுக வின் 118 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.

No comments :
புதுமடத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னெற்ற கழகத்தின் சார்பில் 118 வது ஆம்புலன்ஸ் சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


இது சம்பந்தமாக நடந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொள்ள, அவர்கள் முன்னிலையில் இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்கள், ஆம்புலன்ஸ் சாவியை வழங்கி சமுதாயத்திற்கு ஆம்புலன்ஸை அர்ப்பனித்து வாழ்த்துரை வழங்கினார்.

செய்தி மற்றும் படம்: இராமநாதபுரம் MLA அலுவலகம்

வஜ்ரம் - தமிழ்

No comments :
பொய்யான குற்றச் சாட்டுடன் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் படுகிறார்கள் நான்கு சிறுவர் கள். நால்வருமே நண்பர்கள். சிறுவர்களைக் கொடுமைப் படுத்தும் இரண்டு சிறைக் காவலர் களை, இந்த நால்வரும் நையப் புடைக்கிறார்கள். இவர்களது திறன் அறிந்த மாவட்டக் காவல் அதிகாரி, இந்தச் சிறுவர்களைத் தப்பிக்க வைக்கிறார். அதற்குக் கைமாறாக மாநிலக் கல்வி அமைச்சரைக் கடத்தச் சொல்கிறார். ஆனால் அமைச்சருக்குப் பதிலாக அவரது மகளைக் கடத்திவிடுகிறார்கள். காவல் அதிகாரி ஏன் அமைச் சரைக் கடத்தச் சொன்னார்? அமைச்சரைக் கடத்தாமல் அவர்கள் திட்டத்தை மாற்றியது ஏன்? சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த பின்னணி என்ன ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது வஜ்ரம்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் காட்சிகளோடு ஆமை வேகத்தில் தொடங்கும் படம், அமைச்சரைக் கடத்தியபிறகு முயல் வேகத்தில் ஓட்டமெடுக்கிறது. அமைச்சர் மகளைக் கடத்தி வந்ததற்கான காரணம் ஃப்ளாஷ் பேக்காக விரியும்போது திரைக்கதை பரபர வென நகர்கிறது. அதிகாரத்தைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் அமைச்சர், அவரது அடியாட்கள், இவர்களோடு கைகோக்கும் போலீஸ் ஆகிய காட்சிகள் வழக்கமான வார்ப்பிலேயே உள்ளன. எனினும், மாவட்டக் காவல் அதிகாரியைக் காட்டியிருக் கும் விதமும், மலைவாழ் மக்களுக்காகப் பள்ளிக்கூடம் நடத்துபவரின் போராட்டமும் வலு வாகவும் உணர்ச்சிகரமாகவும் சித்திரிக்கப்பட்டிருப்பது படத்துக்குப் பெரும் பலம். கடத்தல், தப்பித்தல் உள்ளிட்ட பல காட்சிகள் எந்தத் தர்க்கமும் இல்லாமல் மனம்போன போக்கில் நகர்கின்றன.

முக்கிய வில்லனாக ஜெயப்பிர காஷின் நடிப்பும் அவரது மனைவியாக வரும் சானாவின் நடிப்பும் பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது கோபத்தைத் தூண்டும் விதமாக இருக் கிறது. தம்பி ராமையா அசத்தியிருக் கிறார். தன் பள்ளிக்கு அமைச்சர் ஒருமுறை வந்துவிட்டால் பள்ளி மேம்பட்டுவிடும் என்ற அவரது நம்பிக்கை, அமைச்சரைச் சந்தித்தபிறகு நொறுங்கும்போது ராமைய்யாவின் நடிப்பு உலுக்கு கிறது.
ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகிய நால் வரும் நடிப்பில் மேலும் தேறி யிருக்கிறார்கள். அமைச்சரின் மகளாக வரும் பாவனி ரெட்டியிடம் வராமல் நடிப்பு அடம் பிடிக்கிறது.

சிறுவர்களுக்கான சண்டைக் காட்சிகள் மிகையாகிவிடக்கூடாது என்ற கவனத்துடன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் சுப்ரீம் சுந்தர், ஆக் ஷன் பிரகாஷ் இருவரும் பாராட்டுகுரியவர்கள். மலைப்பகுதி, வனப்பகுதி ஆகியவற்றை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கும் குமரேச னின் ஒளிப்பதிவும், இரைச்சல் இல்லாத ஃபைசலின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்த்திருக்கின்றன.

உயர்ந்த லட்சியத்தை அடைய எந்த வழிமுறையை வேண்டு மானாலும் கடைப்பிடிக்கலாம் என்னும் அபாயகரமான செய்தி யைப் படம் முன்வைப்பதுதான் நெருடுகிறது. சிறுவர்களை வன்முறை மீது நம்பிக்கை வைப்பவர்களாகச் சித்தரிப்பது ஆபத்தான போக்கல்லவா?


கீழக்கரையைச் சார்ந்த போலி மருத்துவர் ஏர்வாடியில் கைது

No comments :
கீழக்கரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் தாவூத் இப்ராகீம் மகன் அகமது யாசீன் (45). இவர், 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, ஏர்வாடியில் உள்ளதனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.   இந்நிலையில், அந்த மருத்துவமனை மருத்துவர் வராததால், அகமதுயாசீன் பொதுமக்களுக்கு தானாகவே மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார்.
 இது குறித்து, ஹலோ போலீஸூக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அகமதுயாசீன் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டது. உடனே, அவர் கைது செய்யப்பட்டார். ஏர்வாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

செய்தி: தினமணி

தனி வீடுகள் விற்பனை -ராமநாதபுரம் வீட்டு வசதி வாரியம்

No comments :
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், ஆட்சியர் அலுவலகம் அருகே 92 தனித்தனி வீடுகள் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(file photo)
 ராமநாதபுரம் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பி. சுந்தரமூர்த்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர்,
அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில், பட்டினம்காத்தான் பகுதி-2 சுயநிதித் திட்டத்தின் கீழ், மத்திய வருவாய்ப் பிரிவினருக்கு தனித்தனியாக
92 வீடுகள் கட்டப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளன. எனவே, பொதுமக்களிடமிருந்தும், அரசு ஊழியர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை வரவேற்கிறோம்.
 இது, 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. முதல் பிரிவில், 28 வீடுகள் தலா ரூ. 24.51 லட்சம், 2ஆவது பிரிவில் தலா ரூ. 24.59 லட்சம், 3ஆவது
பிரிவுக்கான வீடுகள் தலா ரூ. 25 லட்சம் செலவிலும் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடுகளும் வாஸ்து முறைப்படி கட்டப்படுகிறது. அடுக்குமாடி வீடுகளாக
இல்லாமல், பொதுமக்களின் விருப்பப்படி தனித்தனி வீடுகளாகவும் கட்டப்பட உள்ளன.
விண்ணப்பித்தவர்களில் தேர்வு செய்யப்படுவோர் அதற்கான ஒதுக்கீடு பெற்றவுடன், 5 சதவிகித தொகையினை ஆணை கிடைக்கப் பெற்ற 21 நாள்களுக்குள்
செலுத்த வேண்டும். மீதமுள்ள 90 சதவிகித தொகையினை 7 தவணைகளாக அடுத்தடுத்து வரும் 3 மாத காலங்களுக்குள் செலுத்திட வேண்டும்.
  இதற்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 3.4.2015 வரை பெற்றுக் கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04567-220611 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.