முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 5, 2015

நன்றி அறிவிப்பு - முகவை முரசு

No comments :
அன்பிற்கினிய வாசக நண்பர்களே,
மிக்க நன்றி!! உங்கள் ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும்.


ஊர் செய்திகள், மாவட்ட செய்திகள், பல்வேறு தளங்களில் முக்கியமான செய்திதகவல்களை, வேலை வாய்ப்பு செய்திகளை, சினிமா விமர்சனங்களை ஓரிடத்தில் தொகுக்கும் ஒரு சோதனை முயற்சியாகவே www.muhavaimurasu.com வலைதளத்தை ஆரம்பித்தோம்..

ஒரு மாத காலகட்டத்தில், 145 பதிவுகள், 3500க்கும் மேலான வாசகர் வரவு பெற்று தினந்தோரும் பார்வையாளர்கள் கூடிக்கொண்டே வருவது, உண்மயில் ஒரு மைல்கல்.

முக்கிய செய்திதாள்களின் செய்திகளை, முக்கிய பத்திரிக்கைகளின் தகவல்களை அவர்களுக்கு நன்றி கூறி பகிர்கிறோம்.
வேலை வாய்ப்பு 99 சதவிகிதம் நிறுவனங்களின் நேரடி தகவல்களாக இருக்குமாரு பார்த்துக்கொள்கிறோம். இருப்பினும் விண்ணப்பதாரர் போதுமான விசாரிப்புகளுக்குப்பின் விண்ணப்பிக்கவும்.

எங்களுக்கு செய்திகள் தந்து ஆதரவு தரும்,

திரு. கலீர் அஹமத், மேலப்பாளயம்.
திரு
. கலீல் பாகவி, குவைத்
திரு. ஹமீது, கீழக்கரை
கீழக்கரை நகர் நல இயக்கம்
திரு. கீழை ஜெஹாங்கீர், சவூதி
திரு. இம்தியாஸ், சவூதி
திரு. ஷேக் முஹம்மது ஷாஜஹான், சவூதி
திரு, முஹம்மது இர்ஃபான், தமுமுக
தொண்டி, பெரியபட்டினம், தேவிபட்டினம் நண்பர்கள்

விளம்பரங்கள் தந்து ஆதரவளிக்கும்,

ஹிஃபா ஹார்டுவேர்ஸ், சென்னை
வசந்தம் ரெசிடென்ஸி, சென்னை
நூர் மெட்டல்ஸ், சென்னை
மேட் & க்ரோம், சென்னை


அனைவருக்கு, மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் செய்திகள், தகவல்கள், விளம்பரங்கள், விமர்சனங்கள் பிரசுரிப்பிற்கு
தொடர்பு கொள்க:
muhavaimurasu@gmail.com


வாழ்க்கையின் திருப்புனை தேர்வான +2 தேர்வுகள் இன்று துவங்கியது

No comments :
இன்று துவங்கியது பிளஸ்2 தேர்வில் இராமநாதபுர மாவட்டத்தில் 14 ஆயிரத்து 933 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பிளஸ்2 தேர்வு இன்று தொடங்குகிறது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 25 மையங்கள், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 20 மையங்கள் என மொத்தம் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 ஆயிரத்து 960 மாணவர்கள், 7 ஆயிரத்து 973 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 933 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
(கோப்பு படம்)

வினாத்தாள் மையங்கள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், மின் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

வாழ்த்துக்கள் மாணவர்களே. வென்று வாருங்கள்.!!

தொண்டி பள்ளிக்கு சாலை அமைத்துதரப்படும் எம்எல்ஏ தகவல்

No comments :
தொண்டி யில் உள்ள அரசு பள்ளிக்கு சாலை அமைத்து தரப்படும் என எம்எல்ஏ சுப.தங்கவேலன் தெரிவித்தார்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்து நேற்று தொண்டியில் கட்சியினர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ சுப. தங்கவேலன் பேசியது: எம்எல்ஏ நிதியிலிருந்தது நடப்பு ஆண்டில் தொண்டி பேரூராட்சிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட குப்பை அள்ளும் எந் திரம் வழங்கப்பட உள்ளது. பி.வி.பட்டினத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் நிழற் குடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மழை காலங்களில் திடல் முழுவதும் தண்ணீர் தேங்கி விடுவதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க மதுரை-தொண்டி சாலையிலிருந்து பள்ளி வளாகத்தில் சாலை போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் இப்பகுதியில் ரேசன் கடை உட்பட பல பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித் தார். கூட்டத்தில் திருவா டானை ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன், தொண்டி நகர் செயலாளர் முகமது அலி ஜின்னா, இஸ்மத் நானா, சவுந்திரபாண்டியன், காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் எம்வி.பட்டினத்தில் நிழற்குடை கட்டவிருக்கும் இடத்தை எம்எல்ஏ பார்வையிட்டார்.