முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 9, 2015

இராமநாதபுரத்தில் விபத்து, தெற்கு தெரவை கிராமத்தைச் சார்ந்தவர் காயம்

No comments :
இன்று (09.03.15)பிற்பகல் சுமார் 1-30மணி அளவில் இராமநாதபுரம் நகர் குமைரய்யா பஸ் நிறுத்த்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த வாகனம் மோதியதில் இராமநாதபுரம் அருகில் உள்ள தெற்க்கு தெரவை கிராமத்தை சேர்ந்த சத்தார் அவர்கள் விபத்துக்குள்ளனர்கள்.
அவர்களே உடனே மறுமலர்ச்சி த.மு.மு.க நிர்வகிகள் தனது சொந்த வாகனத்தில் ஏற்றி கொண்டு இராமநாதபுரம்அரசு தலமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டர் சத்தார் அவர்களின் கை முறிவு ஏற்பட்டு ள்ளது அவர்களுடைய நலனுக்காக எல்ல வல்ல இறைவனிடம் துவா செய்யவும்.

செய்தி; திரு.சாகுல் ஹமீது, மறுமலர்ச்சி தமுமுக

மார்ச் 10ம் தேதி அபுதாபியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாள் கருத்தரங்கு

No comments :

நாள் :- 10-03-2015
செவ்வாய் மாலை 7 மணி
இடம் :- FLAT NO - 904
Emirates NBD BUILDING,
ELECTRA STREET, ABUDHABI
இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் தாய்ச்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 68 வது நிறுவன தினத்தை முன்னிட்டு அமீரக காயிதேமில்லத் பேரவை நடத்தும் "நிறுவன நாள் கருத்தரங்கு "அபுதாபியில் நடைபெற உள்ளது.
இக் கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அமீரக காயிதேமில்லத் பேரவை உங்களை அன்போடு அழைக்கிறது.


ஷார்ஜா WSP ல் “செக்ரட்டரி” வேலை வாய்ப்பு

No comments :


Team Secretary
WSP Group - Sharjah
pixelpixel
The Team Secretary role provides comprehensive administrative secretarial support to the Project Teams and to the discipline Business Unit (BU) in the preparation and filing of reports, correspondence and presentations. Responsibilities
  • Maintain and support the team in diary management
  • Typing of letters, reports, proposals and general documentation using templates. Accurate presentation and editing of complex documents using knowledge of engineering terms
  • Draft non-technical correspondence, creating spreadsheets for data collation, preparation of organograms using Visio and creating PowerPoint presentations using imported images and text in accordance with WSP templates as necessary.
  • Manage the onward distribution of incoming documents ensuring WSP Document Control procedures have been followed and urgent matters are brought to the attention of the relevant personnel
  • Maintain accurate records of outgoing documents/correspondence using the Project Correspondence Out (F7) Register
  • Manage outgoing documents in particular the issuing of reports/drawings, ensuring WSP Document Control procedures have been followed, in particular the F5 Document/Drawing Issue Register
  • Maintain accurate records of electronic filing with respect to the Bids and Marketing drive, ensuring WSP’s filing and referencing procedures are strictly adhered to so that traceability is maintained.
  • Coordinate project team meetings, prepare agenda, attend meetings, take notes and type up using WSP templates and distribute to all parties concerned.
  • Arrange internal/external meetings/conference calls as and when requested, ensuring all parties are notified promptly and equipment and meeting rooms booked.
  • Handle telephone calls, taking messages as necessary and making calls as instructed to clients/external contacts in a professional and timely manner. Deal with any routine enquires and escalate appropriately as required
  • Manage the supply of Business Cards for the team, liaising with the Admin Office with respect to the ordering of new Business Cards
  • Work as part of a team to ensure project submission deadlines are met and provide cover during annual leave or sickness
  • Give support with the training and development of junior employees and new starters as and when requested.
  • Provide cover on reception as and when requested.
  • Arrange travel and accommodation as and when requested ensuring that WSP ME Travel Policy is followed.
  • Maintain confidentiality at all times and ensure any sensitive issues are dealt with appropriately
  • Ensure that Health & Safety is embedded into all work practices in line with company policies
  • Provide regular work status updates, including risks or concerns, to line manager
  • Attend and contribute in team and project meetings as required
  • Contribute to the delivery of the business unit strategy
  • Support the companies approach to sustainability
  • Ensure QMS and Project Lifecycle compliance across team and projects
  • Complete accurate timesheets by set deadline
  • Feedback on all business development opportunities Requirements
  • Minimum of 1 years’ experience as a secretary working in a fast paced professional environment
  • Experienced Microsoft Office user
  • Relevant IT qualification

TO APPLY: CLICK HERE

பன்றிக் காய்ச்சல் - தடுக்கும் வழிமுறைகள்

No comments :
பன்றிக்காய்ச்சல் நோய் தோன்றிய விதம் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் சுகாதார துறையினர் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதனை பார்க்கலாம்.

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல், 1920–ம் ஆண்டில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடமிருந்து பன்றிகளுக்கு இந்த காய்ச்சல் பரவியது. பின்னர் நாளடைவில் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவத்தொடங்கியது.

 அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவி வருகிறது. இதனாலேயே இக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது.

 தற்போது இந்த நோய் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. ‘‘எச்–1 என்–1’’ என்ற வைரஸ் கிருமி மூலமாகவே மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலமாகவே வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது.

இக்கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேஜை, குளிர்சாதன
பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும் போது, அக்கிருமிகள் நம் கையில் ஒட்டிக்கொள்கின்றன. இதன் மூலமும் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது.

 இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் 2 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரம் தாக்குப்பிடிக்கும்.

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம், சளியில் ரத்தம் வருதல், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் ஆகியவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

o   வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்புபவர்கள் சோப்பு போட்டு கை, கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் நல்லது. கைகளை கழுவாமல், மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது.
o   காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களிடமிருந்து 1 மீட்டர் இடைவெளி விட்டே விலகி இருக்க வேண்டும். அவர்களுடன் கைகுலுக்கி பேசக்கூடாது.
o   வீட்டில் உள்ள பொருட்களை தினமும் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும். தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க்அணிந்து செல்ல வேண்டும்.
o   பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், துணியால் நன்றாக மூக்கையும், வாயையும் பொத்திக்கொள்ள வேண்டும். முடிந்தவரை பொது இடங்களுக்கு செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
o   கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளாததால் தான் 80 சதவீதம் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோப்பு போட்டு கைகளை கழுவுவதற்கு 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
o   முதலில் கைகளை தண்ணீரில் நன்றாக நனைத்து விட்டு சோப்பு போட்டு விரல் இடுக்குகளிலும் நன்றாக கழுவ வேண்டும்.

o   பன்றிக்காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற மருத்துவ உதவி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

தகவல்: திரு. ஹிதாய்த்

கீழக்கரையில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பரிமுதல், டிரைவர் கைது

No comments :
கீழக்கரை தட்டான்தோப்பு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிசெல்வதாக காவல் துறைக்கு  தகவல் வந்ததை அடுத்து  கீழக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் ஏற்றி வந்த கீழக்கரை கோகுல்  நகரை சேர்ந்த ஜெகதீஸ்வரனை  கைது செய்தனர் .
பறிமுதல் செய்த டிராக்டரையும் ஜெகதீஸ்வரனையும் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் கீழக்கரை காவல் துறையினர் ஒப்படைத்தனர்.


செய்தி: தினத்தந்தி

கீழக்கரை- ராமநதபுர சாலையில் விபத்து, வாலிபர் உயிரழப்பு

No comments :
ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த ஜிந்தா முகம்மது மகன் சகுபர்சாதிக் (16). இவரும், நேரு நகர் 5ஆவது தெருவில் வசிக்கும் செல்வம் மகன் சரவணன் (14) ஆகிய இருவரும், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்குச் செல்லும் சாலையிலுள்ள ரயில்வே கேட் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகுபர் சாதிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சரவணன் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து, உயிரிழந்த சகுபர் சாதிக்கின் சகோதரர் அக்பர் அலி அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

செய்தி: தினமணி