முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 10, 2015

சவூதி அரேபியாவில் புதிய சட்டம்

No comments :
சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியல்.
இந்த விபரங்கள் பின்வருமாறு:
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.
மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்
மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்:
முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
மீறினால்:
முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.
மீறினால்:
சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
மீறினால்:
சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்
8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
மீறினால்:
SR 10000
அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.
9. ஹஜ் ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.
மீறினால்:
உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.
10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் கஃபாலத் ஸ்பான்ஸர்ஷிப்மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
மீறினால்:
இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது
11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
மீறினால்:
SR 5000
அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்
12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
மீறினால்:
கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.
13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
மீறினால்:
முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்
மீறினால்:
SR 5000
அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை
16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்
ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.
17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்:
முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்.

தகவல் பகிர்வு: திரு அபுபக்கர், காயல்பட்டினம்

துபாய்-ல் கட்டுமான தொழிலாளர்கள் “ஸ்ட்ரைக்”

No comments :
துபாய்-ல் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று (மார்ச் 10) காலை ”துபாய் மால்” அருகில் ”டவுன் டவுன்” சாலையில் குழுமி, சம்பளப்பிரச்சனைக்காக போராடினர்.



இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது, இதனை அடுத்து போலிசார் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச்செய்தனர்.


செய்தி: 7 டேஸ் தினசரி

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு

No comments :
Certificate Course in  Fundamentals & Use of Tamil Computing
04.05.15 - 29.05.15

எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.

கணினியின் அடிப்படையையும் செயல்பாட்டையும் தெரிந்துகொண்டு  அனைவரும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது. 
இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகள் பெறமுடியும்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பருவ விடுமுறையில் நடைபெற உள்ளது.

பணி ஓய்வு பெற்றவர்களும் இல்லத்தரசிகளும் பங்குபெறலாம்.

வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை 20 நாட்கள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

குறைந்தபட்சக் கல்வித் தகுதி: 10-ம் வகுப்பில் தேர்ச்சி. வயது வரம்பு இல்லை.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை http://www.srmuniv.ac.in எனும் இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். 

விண்ணப்பத்தை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 1000/- (ஆயிரம்)-த்திற்கான வரைவோலையை(DD) ‘SRM TAMIL PERAYAM’ என்னும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் 25.04.2015, சனிக்கிழமை.

தொடர்புக்கு:
முனைவர் இல. சுந்தரம்
Dr. Ila. Sundaram
M.A.(Tamil), M.A.(Ling.), M.Sc.(I.T), MCA., MBA., M.Phil., PGDCA., Ph.D.
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.

Cell: +91-97909 00230

தகவல் பகிர்வு: திரு.முதுவை ஹிதாயத்

பாம்பன் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மாணவ, மாணவிகள் அமரும் மரத்தாலான மேசைகள்

No comments :
மண்டபம் ஒன்றியம், பாம்பன் ஊராட்சி, பாம்பன் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய். 5.00 ( ஐந்து லட்சம் ) செலவில் மாணவ, மாணவிகள் அமரும் மரத்தாலான மேசை நாற்காலிகளைமனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர் M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் பள்ளிக்கு வழங்கி மாணாக்கர்களிடையே கலந்துரையாடினார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறும்போது :- கல்வி நிலையங்களின் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை நான் செய்திருக்கின்றேன், அதிலும் குறிப்பாக நமது ராமேசுவரம் தீவுப்பகுதியில் கல்வி மேம்பாட்டு பணிகளுக்காக ரூபாய்.59.00 ( ஐம்பத்தி ஒன்பது லட்சம் ) என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பணிகள் நடைபெற்றுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி அரசு ஒதுக்கியது ரூபாய். எட்டு கோடி ஆகும். அதில் சுமார் ஒரு கோடியே அறுபத்தி எட்டு லட்சம் ரூபாய் பள்ளிக்கூட கட்டிடங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு கூடங்கள் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் இந்த பாம்பன் அரசு பள்ளிக்கூடம் உயர்நிலைப்பள்ளியாக இருந்து தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதற்காக இங்குள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஜமாஅத்தார்கள், மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் இவ்விஷயம் சம்பந்தமாக என்னிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து
உடனடியாக இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசியதுடன் அப்போதிருந்த பள்ளி கல்வி அமைச்சர் அவர்களிடம் இப்பகுதியின் வளர்ச்சி நிலைகள் இதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்து அதன்பின் அரசால் இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது.
அதற்காக இந்த நேரத்தில் தமிழக அரசுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் நபார்டு நிதி உதவியுடன் இப்பள்ளிக்கு மேலதிக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்காக முயற்சிகள் செய்வேன் என்று சுட்டி காட்டினார்கள்.
இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டாலும் நீண்ட காலமாக போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருந்து வந்தது. அந்த குறையையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மரியாதைக்குரிய நண்பர் திரு.K.C.வீரமணி அவர்களிடம் எடுத்துக்கூறி தற்போது இங்கு போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இருப்பினும் தற்போது நிரந்தர தலைமை ஆசிரியர் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதையும் பள்ளிகல்வி அமைச்சர் அவர்களிடம் கூறி அதற்கான நிரந்தர தீர்வு ஏற்பட முயற்சி செய்வேன் எனக்கூறினார்கள்.
இப்பள்ளியின் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இப்பள்ளியில் தன்னலம் பாராமல் பணிசெய்துவரும் இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும், ஊர் பிரமுகர்களுக்கும், ஜமாத்தார்களுக்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சகோ.பேட்ரிக் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு
இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறியது மேற்கண்ட அனைவரின் முயற்சியை விடவும் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் எனது பங்களிப்பும் இப்பள்ளிக்கு அதிகமாகவே உள்ளது.
என்னதான் நாங்கள் எல்லாம் பாடுபட்டாலும் மாணவர்களாகிய உங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. என்றுகூறி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலதரப்பட்ட சிறந்த முன்னோடிகளான கல்வியாளர்களை எடுத்துக்காட்டாக கூறி நீங்களும் அதுபோல் பெரிய கல்விமான்களாக, அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக, அரசுத்துறை உயர் அதிகாரிகளாக வரவேண்டும் எனக்கூறி நெருங்கி வரும் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் மாணவர்களாக வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அதற்காக இப்போதிலிருந்தே உங்களின் கவனத்தை தொலைக்காட்சி, கைபேசி என என்னென்ன சாதனங்கள் எல்லாம் உங்களின் கவனத்தை திசை திருப்புமோ அத்தகைய அத்துணை தேவையில்லாத வேலைகளை விட்டும் ஒதுங்கி படிப்பில் நல்ல கவனம் செலுத்தி நன்றாக படித்து முன்னேற வேண்டும். என மாணவர்களை வாழ்த்தி அவர்களின் உரையை நிறைவு செய்தார்கள்.
அதன்பின் பேசிய ஜமாஅத் நிர்வாகிகள் பேசும்போது சட்டமன்ற உறுப்பினரின் பணிகளை மிகவும் பாராட்டி வாழ்த்தி பேசி மாணவர்களிடையே நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கூறி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு ஜமாஅத் சார்பாகவும், ஊரின் சார்பாகவும் அவர்களின் நன்றியை கூறினார்கள்.
அதுபோல் ஊராட்சி மன்ற தலைவர் சகோ.பேட்ரிக் அவர்கள் பேசும்போது உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்ததற்காக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மிகவும் பிரயாசைப்பட்டிருக்கின்றார்கள்.
அதை என்றென்றும் இந்த பாம்பன் பொதுமக்கள் மறக்க மாட்டோம். 200 பிள்ளைகள் வெளியூர் சென்று தங்களது படிப்பை மேல்நிலைப்பள்ளியில் தொடர வேண்டிய சூழ்நிலையில் தக்க சமயத்தில் உதவி செய்து இங்கேயே அவர்கள் அனைவரும் படித்து முன்னேறக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் ரூ.ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாணாக்கர்கள் அமர்ந்து கல்வி பயில்வதற்கு ஏதுவாக மரத்திலான மேசை,நாற்காலிகளை வழங்கி உதவியதற்கு ஊர் சார்பாக அவர்களின் நன்றியை தெரிவித்தார்கள்.
இப்பள்ளியில் தற்போது எட்டு முதுநிலை ஆசிரியர்களுடன் ஆசிரியர்கள் பத்து பேர், ஆசிரியைகள் 13 பேர் என மொத்தம் 23 நபர்கள் பணியில் உள்ளார்கள், இங்கு +2 மாணவர்கள் 83, +1 மாணவர்கள் 85 பேர் உட்பட 599 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றார்கள். இதில் சென்ற கல்வி ஆண்டில் நல்ல தேர்ச்சி விகிதம் கிடைத்தது அதுபோல் இவ்வருடமும் எதிர் பார்க்கப்படுகிறது.
இங்கு ரூ.ஐந்து லட்சம் செலவில் வழங்கப்பட்ட 39 மேசை, நாற்காலிகள் முதற்கட்டமாக சுமார் 200 மேல்நிலை மாணவர்கள் வரை அமர்ந்து கல்வி பயிலும் வண்ணம் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் +2 படிக்கும் 83 மாணவ, மாணவிகளுக்கு இவ்வருட தேர்விற்கான ஹால் டிக்கெட் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிராம கல்விக்குழு தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான திரு.பேட்ரிக் அவர்களால் வழங்கப்பட்டது.
பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு திருமதி.C.R.சுதா குமாரி M.sc.,M.Ed., முன்னதாக வரவேற்புரை உதவி தலைமை ஆசிரியர் திரு.J.பென்சிகர் அவர்கள், முடிவில் நன்றியுரை பட்டதாரி ஆசிரியர் திரு.A.ஜஸ்டின் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜனாப்.அப்பா ஜமால் அவர்களும் , ஊர் முக்கியஸ்தர் சிறப்பு அழைப்பாளர் ஜனாப்.அயூப்கான் அவர்களும்,
மற்றும் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் சகோ.B.அன்வர் அலி, பாக்கர் அலி, சக்கரக்கோட்டை மைதீன், நூருல் அஃப்பான், பாம்பன் மீரா உசேன், மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி: MLA அலுவலகம், இராமநாதபுரம்

துபாய் அரசாங்க சுகாதார நிலையத்தில் “MEDICAL SECRETARY” வேலை வாய்ப்பு

No comments :


Job Details
Title
MEDICAL SECRETARY
Category
Administration 
Description
DHA is currently looking for Qualified Medical Secretaries with a minimum of 3 years experience in the same field. Preferably a Graduate of any Science course. (Nursing, Pharmacy etc.)