முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 12, 2015

சென்னையில் சர்வதேச தரத்திலான முதலாவது இஸ்லாமிய புத்தக மையம்.

No comments :
சென்னை ரஹ்மத் அறக்கட்டளை  இப்போது சென்னையில் சர்வதேச தரத்திலான முதலாவது இஸ்லாமிய புத்தக மையம்( ISLAMIC BOOK CENTRE).


ஆங்கில மொழியில் திருக்குர்ஆன், நபிமொழி, வரலாறு, சட்டம், கொள்கை, தத்துவம், குடும்பவியல், சமூகவியல், பொருளியல், அரசியல், அறிவியல், மகளிர், சிறுவர் என எல்லாத் தலைப்புகளிலும் இந்திய மற்றும் உலக நாடுகளின் பிரபலங்கள் எழுதிய இஸ்லாமிய நூல்கள் இங்கே கிடைக்கும்.

இப்படியொரு புத்தக மையம் இல்லையே என்று ஏங்கிய இதயங்களுக்குக் குளிரூட்டப்பட்ட விசாலமான நவீன தளத்தில், அமர்ந்து படித்துப் பார்த்து நூல்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியுடன் கூடிய புத்தக மையம் ! உங்கள் கல்லூரி நூலகத்தில் அவசியம் இருக்க வேண்டிய ஆங்கிலம் மற்றும் தமிழ் இஸ்லாமிய நூல்கள்.

உங்களுக்குத் தேவையான நூல்களை இணையதளத்தில் ஆர்டர் செய்தும் வாங்கலாம்.
  
இணையதள முகவரி :


தொடர்புக்கு :
E.M. உஸ்மான்,
கைபேசி: 94440 25000
ரஹ்மத் பதிப்பகம் இஸ்லாமிய புத்தக மையம்
6, இரண்டாவது பிரதான சாலை, சி.ஐ.டி. காலனி,
மைலாப்பூர் , சென்னை – 600 004,
தொலைபேசி : 044 2499 7373
Web : rahmath.net
Email : buhari@rahmath.net   


தகவல்: திரு.முதுவை ஹிதாயத்

கீழக்கரையில் காலாவதியான உணப்பொருட்கள் பரிமுதல், நகராட்சி அதிகாரிகள் அதிரடி!!

No comments :
கீழக்கரையில் இன்று நடந்த நகராட்சி அதிகாரிகள் ஆய்வில், நகரில் பல்வேறு கடை மற்றும் ஹோட்டல்களில் காலாவதியான பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

அதிர்ச்சிதரக்கூடிய காட்சியாக சில ஹோட்டல், பேக்கரிகளில் உணவுப்பொருட்களில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கையாக அதனை அதிகாரிகள் அந்த பலகாரங்களை தரையில் கொட்டி அழித்தனர்.
  (கோப்பு படம்)

வியாபரிகளுக்கு எச்சரிகை விடப்பட்டதோடு, இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடக்கும் என்றும் அறிவித்தனர்.

துபாய் DEWA நிறுவனத்தில் WALK IN INTERVIEWS மார்ச் 14ம் தேதி நடைபெறுகிறது.

No comments :

ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை – தமிழ் திரை விமர்சனம்

No comments :
படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கைபடத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது.
வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த மாற்றத்துக்குப் பின்னாலுள்ள காரணம் என்ன? என்பதை முன்னும் பின்னுமாக நகர்ந்து சொல்கிறது சேரனின் ஜே.கே. எனும் நண்பனின் கதை.

ஆட்டம் பாட்டம் கும்மாளம் எனத் திரியும் ஜே.கே. என்னும் ஜெயகுமாரின் (சர்வானந்த்) வாழ்க்கை சட்டென மாறுகிறது. பொறுப்பில்லாத மூத்த பிள்ளையாக இருந்த சர்வானந்த் தங்கைகளுக்காக, தம்பிக்காக, அப்பா, அம்மாவுக்காக ஓடுகிறார். கிடைக்கும் வாய்ப்புகளையும் சமயோசித புத்தியையும் சரியாகப் பயன்படுத்தி மேலே வருகிறார். ஏழு நண்பர்களின் துணையுடன் அவன் தொழில் வெற்றி நடைபோடுகிறது. இடையில் வரும் கடுமையான சவால்களைச் சாமர்த்தியமாக முறியடிக்கிறார். தன் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வெளிநாடுச் சுற்றுலாவுக்குக் கிளம்புகிறார். அந்தச் சுற்றுலாவுக்குப் பின் ஒரு ரகசியம் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகி னாலே அது காதலாகவோ வெறும் மோகமாகவோ முடிந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறிதும் தயக்கமின்றி வீட்டில் அமர்ந்து பார்க்கத்தக்க விதத்தில் கதையும் காட்சியமைப்புகளும் வசனங்களும் உள்ளன.
இருப்பினும், தொடக்கத்திலிருந்து விறுவிறுப்பாக நகரும் கதை, பிற்பாதியில் தொய்வடைகிறது. அப்பா, மகன், மகள் ஆகியோர்களின் உறவுச் சித்தரிப்பு டிவி சீரியல் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளது.
தெளிவாகவே நடிக்கும் சர்வானந்த், தமிழ் உச்சரிப்பை மேம்படுத்திக்கொண்டால் நல்லது. நித்யா மேனனின் நடிப்பு மனதைக் கவர்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம்போலவே தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் தன் பாத்திரத்தைக் கையாள்கிறார். கலகலப்புக்காக சந்தானம்... ஆனால் அவர் வரும் காட்சிகள் வசன ஜாலங்களாக மட்டுமே கடந்து போகின்றன.

சித்தார்த்தின் கேமரா உறுத்தலில்லாமல் படத்துடன் இணைந்து பயணிக்கிறது. விபினின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கவில்லை. ஜி.வி. பிரகாஷ்குமாரின் பாடல்களும் சுமார்தான்.

நேர்மையுடனும் திறமையுடனும் போராடினால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையைப் பெருமளவில் சுவாரஸ்யமாக விதைத்திருக்கிறார் இயக்குநர் சேரன். அதற்காகவே வரவேற்கலாம்.

புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது குண்டு வீச்சு!!

No comments :
சென்னையில் உள்ள புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத மத அமைப்பினர் சிலர் அந்த தொலைக்காட்சியின் ஒளிப்பாதிவாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது 'டிபன் பாக்ஸ்' குண்டுகள் வீச்சு!!

இந்நிலையில் இன்று அதிகாலையில் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 2 டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர்.
புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது 'டிபன் பாக்ஸ்' குண்டுகள் வீச்சு!!

இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்தன. இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். 2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Courtesy: One inida.com