முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 21, 2015

ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!!

No comments :

ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயில் வாரம் மூன்று முறை இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் வழியாக பயணப்படும் இந்த விரைவு ரயிலை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயிலில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 16780/16779: ராமேசுவரம்- திருப்பதி- ராமேசுவரம் வாரம் மூன்று முறை விரைவு ரயிலில் நிரந்தரமாக 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி மார்ச் 24-ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.

மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மதுக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

No comments :
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று மாலை 20/03/2015 பல்லாவரத்தில் மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ம.ம.க மாவட்ட செயலாளர் சலீம்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் அஸ்லம் பாஷா MLA மற்றும் காஞ்சி ( வடக்கு ) மாவட்ட செயலாளர் அண்ணன் எம் யாக்கூப் அவர்களும் கண்டன உரை ஆற்றினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்700 பேருக்கு மேல் கலந்து கொன்டனர் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் 

செய்தி: திரு.பம்மல் செளகத்


துபாய் Trinity Holdings நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

No comments :
Administration Coordinator cum Receptionist (2 - 5 yrs.)
Trinity Holdings - Dubai
Share

Candidate will be required to handle administrative coordination activity of the department along handling front office (Reception ) job.

Desired Candidate Profile Outstanding verbal and written communication skills.
Experience and Proven Success in a Technical co-ordination role.
Extensive customer liaison exposure.
Proficient in the use of MS Office, particularly MS Projects. Knowledge of AutoCAD is an added advantage.
Generating technical sales proposals and contracts (Statement of Work, Services Proposals)
Working with the engineering & service teams to ensure development schedules and deliveries are being met.
Answer all incoming calls and handle caller’s inquiries whenever possible
 Re-direct calls as appropriate and take adequate messages when required
 Greet, assist and/or direct visitors
 Receive, direct and relay telephone messages and fax messages
 Maintain an adequate inventory of office supplies especially letterheads etc

TO APPLY: CLICK HERE

ஏமன் நாட்டில் இரண்டு மசூதிகளில் தற்கொலை தாக்குதல் - 142 பேர் பலி

No comments :
ஏமன் நாட்டில் இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 142 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமன் தலைநகர் சானாவின் தெற்கு பகுதியில் பத்ர், அல் ஹசாஹூர் மசூதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை. தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது அங்கு நுழைந்த தற்கொலை படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 142 பேர் பலியானதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் - 142 பேர் பலி!
மேலும் 300 க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.