முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, March 27, 2015

கீழக்கரையில் HDFC வங்கியின் புதிய கிளை!!

No comments :
கீழக்கரை தபால் அலுவலகம் ரோடு (POST OFFICE ROAD) கிழக்கு தெரு செல்லும் பாதையில்,இன்று H.D.F.C வங்கி திறக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியை கட்டிடத்தின் உரிமையாளர்,ஜனாப்.அலாவுதீன் (டங் டங்) அவர்களால் திறந்து வைக்கபட்டது,சிறப்பு விருந்தினராக மதுரை H.D.F.C வங்கியின் துணை தலைவர் திரு.C.V.ஹரிகலந்து கொண்டார்.

இது குறித்து  அந்த வங்கியின் மேலாளர் திரு நடராஜ் குமார் அவர்கள் கூறும் போது எங்களது வங்கி இந்தியாவில் 6000 க்கு  மேலாக உள்ளது தற்போது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கீழக்கரையில் திறக்கப்பட்டுள்ளது . 
இதில் விவாசாயகடன்,நகைகடன், இருசக்கர வாகன கடன் ,புதிய வீட்டுகடன்,இதுமட்டுமல்லாது நகரத்தில் என்னென்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல கீழக்கரை கிளைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 
மேலும் விபரங்களுக்கு கிளை மேலாளர் நடராஜ் குமார்.தொலைபேசி என்:98941 423 57.

செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்

கத்தாரில் கீழக்கரை மக்களின் சமூக நல கூட்டம் (படங்கள்)!!

No comments :
SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் திரு. அப்துல் ஹமீது அவர்களின் கத்தார் வருகையையை முன்னிட்டு, அவரின் சொந்த ஊர் கீழக்கரையைச்சார்ந்த மக்களுடன் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இன்று ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கியதோடு, சில அரசியல் சந்தேகங்களை கேள்வி - பதில் மூலம் நிவர்த்தி செய்து கொண்டனர்.

கலந்தாய்வு படங்களிள் சில உங்கள் பார்வைக்கு:
படங்கள்; திரு. கீழை ஹசன் அன்சாரி, கத்தார்