முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, April 3, 2015

அனுமதியின்றி மணல் அள்ளிய வானகங்கள் பரிமுதல். 6 பேர் கைது!!

No comments :
சாயல்குடி அருகே தத்தங்குடி கண்மாய்க்குள் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 9 வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் 14 பேர் மீது வாலிநோக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து அதில் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
சாயல்குடி அருகே தத்தங்குடி கண்மாய்க்குள் அனுமதியின்றி இரவில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த 6 டிராக்டர்கள், கார், இரு சக்கரவாகனம் மற்றும் மணல் அள்ளும் இயந்திரம் என மொத்தம் 9 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் 14 பேர் மீது வழக்குப் பதிந்து செந்தில்குமார், கூரிமுருகன், பஞ்சவர்ணம், பஞ்சாண்டி, சக்திகுமார், மாணிக்கராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி