முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 12, 2015

அபுதாபி Schneider Electric நிறுவனத்தில் Site/Service Engineer வேலை வாய்ப்பு!!

No comments :
Site/Service Engineer - SYS
Schneider Electric - Abu Dhabi


Site/Service Engineer - SYS - 001AI8 Provides highly visible customer support through the performance of on-site installation, as well as overseeing any necessary diagnoses, troubleshooting, service, and repair of complex equipment and systems. Checks out and approves operational quality of system equipment. Instructs customers in the operation and maintenance of the system. Serves as company liaison with customer on administrative and technical matters for assigned projects. Interprets customers needs and clarifies if the responsibility for problem resolution falls to sales personnel, customer support reps, or engineers. This job may include any aspect of field support, and is not limited to system hardware and software, PCs, and networking/wireless networking.
Qualifications
KNOWLEDGE

Learns to use professional concepts. Applies company policies and procedures to resolve routine issues.

JOB COMPLEXITY

Works on problems of limited scope. Follows standard practices and procedures in analyzing situations or data from which answers can be readily obtained. Builds stable working relationships internally.

SUPERVISION

Normally receives detailed instructions on all work. Work is regularly reviewed by supervisor/senior peers.

EXPERIENCE

Typically requires 1-3 years of professional experience.

Primary Location : United Arab Emirates-Abu Dhabi-Abu Dhabi

Schedule : Full-time
Unposting Date : Ongoing

TO APPLY: CLICK HERE

சென்னையில் ஓர் புதிய உதயம் “ தாஜ் ட்ரேடர்ஸ்”!!

No comments :


பல வருடங்களாக சென்னை காசி செட்டி தெருவில் இயங்கி வருகிறது “தாஜ் ட்ரேடர்ஸ்”. இதனுடைய ஸ்தாபகர், கீழக்கரையை சார்ந்த மர்ஹூம் திரு. இப்ராஹீம் அவர்கள்

இவர்களுடைய புதல்வர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த ஸ்தாபனத்தின் புதிய அலுவலகம் இன்று (ஏப்ரல் 12) சென்னை, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் திறக்கப்பட்டது.

கீழக்கரை வடக்குத்தெரு முன்னாள் தலைவர். ஹாஜி. ரெத்தின முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தார்.





உங்கள் சுற்றுலா மற்றும் பிரயாண டிக்கெட் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஹஜ்-உம்ரா சேவைகளும் வழங்கப்படுகிறது.


தொடர்புக்கு: +91-44-25262714
திரு. குதுபு ரியாஸ்
திரு. சாதிக் அலி
திரு. மதார் நெய்னா 
&
திரு. ஹசன் நியாசுதீன்


(குறிப்பு: இவ்வகையான வியாபார செய்திகளை இலவசமாகவே வழங்கி வருகிறோம்.

எந்த மத்தியஸ்தர்களும் நியமிக்கப்படாமல், muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் மற்றும் ஃபேஸ்புக் மெஸேஜ் மூலமாக பெறப்படும் தகவல்களை சரிபார்த்து வெளியிடுகிறோம் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.)

தேசிய ஜூனியர் கேரம் போட்டி: ராமநாதபுரம் மாணவருக்கு தங்கப்பதக்கம்!!

No comments :
தேசிய அளவிலான ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.தினேஷ்பாபு தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருப்பதாக மாவட்ட கேரம் சங்கத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.

 இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 28.3.2015 முதல் 31.3.2015 வரை தேசிய ஜூனியர் கேரம் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழ்நாடு அணிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேரம் விளையாட்டு வீரர் எஸ்.தினேஷ்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடினார். தமிழக அணி இறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேச அணியை மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் வீழ்த்தி தங்கம் வென்றது.

 தமிழகத்துக்கும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தமைக்காக ஆட்சியர் க.நந்தகுமார் தினேஷ்குமாரை பாராட்டினார் என்று அவர் தெரிவித்தார்.

அப்போது மாவட்ட கேரம் சங்கச் செயலர் அ.சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன், மாநில கேரம் போட்டி நடுவர்கள் கண்ணன், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: தினமணி

கீழக்கரையில் விபத்து!! வாலிபர் மரணம்!!

No comments :


கீழக்கரை அருகே வண்ணந்தாரவை E.B.அலுவலகம் அருகில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.


அவரை காவல்துறை உதவியுடன் கீழக்கரை த.மு.மு.க ஆம்புலன்சில் கொண்டு சென்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் யார் என்று விசாரித்ததில் கீழக்கரை கிழக்குதெருவைச் சேர்ந்த அபுபக்கர் அவர்களுடைய மகன் காஜா சர்புதீன் என்று தெரியவந்தது.

அவருடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு காவல்துறை நடவடிக்கைகளை சரிசெய்து ஜானாஸவை பெற்று அன்னாரது குடும்பத்தில் ஒப்படைத்தனர் கீழக்கரை த.மு.மு.க வினர்.


செய்தி: திரு.ஃபவுஜ் அமீன், கீழக்கரை