முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Thursday, April 16, 2015

வண்ணமயமாக நடைபெற்ற கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” மழலையர் பட்டமளிப்பு விழா!!(படங்கள்)

No comments :
14ம் தேதி ஏப்ரல் மாதம், வண்ணமயமாக நடைபெற்ற கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” மழலையர் பட்டமளிப்பு விழா!!(படங்கள்)

சிறப்புற நடைபெற்றது, கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மழலையர் பட்டமளிப்பு விழா.

வாண்டுகளின் வண்ணமயமான அணிவகுப்பில் நிர்வாகமும் பெற்றோர்களும் அக மகிழ்ந்தனர். மழலைச்செல்வங்களை உச்சி முகர்ந்தனர்.

கீழக்கரை நகர் மன்ற தலைவி. திருமதி.ராபியத்துல் காதிரிய்யா மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டி பட்டங்களை வழங்கினர்.

தாளாளர் திரு. எம்.எம்.கே. இப்ராஹீம் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர். திருமதி.மேபல் ஜெஸ்டஸ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
படங்கள்: திரு. எம்.எம்.கே.இப்ராஹீம், 
தாளாளர், இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள்

ஏர்வாடியில் வீடு புகுந்து திருட்டு!!

No comments :
கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் புதன்கிழமை வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகீம் மகன் அப்பாஸ் (42). இவர் ஏர்வாடி தண்ணீர் பந்தல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கம் போல் இவர் புதன்கிழமை வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி அருகில் உள்ள தர்காவுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டாராம். அப்போது இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து கைப் பையில் இருந்த 7 கிராம் சங்கிலி, ரூ.2000 ரொக்கம் மற்றும் ஒரு செல்லிடப் பேசி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டாராம்.  இது குறித்து அப்பாஸ் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் பால்பாண்டி வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.

செய்தி: தினமணி