முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 19, 2015

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டம் !!

No comments :
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இணைப்புக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏழை மாணவர்களிடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இலவச கல்வித் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த 2010-11 கல்வியாண்டில் அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள அரசு உதவிபெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் எந்தவித கட்டணமும் இன்றி மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதுதொடர்பான விவரங்கள், விண்ணப்பங்களை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 15 நாள்களுக்குள், பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: திரு.ஹிதாயத், துபாய்

துபாய் Atlas Continent Contracting நிறுவனத்தில் Procurement Officer வேலை வாய்ப்பு!!

No comments :
Procurement Officer
Atlas Continent Contracting LLC - Dubai

We are the reputed interior fit out company currently searching for the enthusiastic and responsible Procurement Officer to join us.
The best suitable candidate should have:
- At least 5 years’ experience in fit out materials purchasing;
- Strong research and negotiation competencies;
- Bachelor degree in Accounting, Business or related fields from an accredited institution.;
- Fluency in English;
- Proficiency in Microsoft Office and search engines;
- Able to deliver effective results, meet tight deadlines and targets;
- Good judgments in making purchasing decisions;
Your main responsibilities will be:
Acquiring material for the company, compare and evaluate product offered to determine if the align with the need of the company; compare the quotations with the price of the BOQ, choose the most reliable suppliers before generation of purchase order. Fully aware of purchasing process.
TO APPLY: CLICK HERE

தேவிபட்டினம் பஸ் நிலையம் பணிகள் நிறைவு. திறப்பு விழா எப்பொழுது?!

No comments :
தேவிபட்டினம் பஸ் நிலையத்தில் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

பஸ் நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்சாலை அருகே உள்ள தேவிபட்டினம் பாண் டிச்சேரி, சென்னை, நாகூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி, வேளாங்கண்ணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்லும் பஸ், சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வசதியாக உள்ளது. தேவிபட்டினம் சுற்று வட்டார பொதுமக்கள் இங்கிருந்தே பல் வேறு இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகள் ஏராளமா னோர் கடலுக்கு அமைந்து நவபாசானத்துக்கு வந்துசெல் கின்றனர்.

தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் தொடர் முயற்சி மேற் கொண்டு மாவட்ட கலெக்டர் நந்தகுமாரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அவர் பரிசீலனை செய்து அரசு மூலம் தேவிபட்டி னத்தில் பஸ் நிலையம் அமைக்க உடனடி தீர்வு காணப்பட்டது.
இதன் பயனாக ரூ.1 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த 23.5.2014–ல் தொடங்கியது. திறப்பு விழா: 

ராமநாதபுரம் யூனியன் என் ஜினீயர் இளங்கோ மேற்பார் வையில் பணிகள் மும்முரமாக நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவ டைந்துள்ளது. இங்கு இருபுற மும் பிராண்ட நுழைவு வாயில், வணிக வளாகம், ஏற்கனவே உள்ள வணிக வளாக மராமத்து, நவீன கழிப் பறைகள், பயணி கள் ஓய்வு எடுக்கும் அறை, 6 பஸ்கள் நின்று செல்வதற்கான நிழற் குடை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

கலெக்டர், ஊராட்சி தலைவர் நடவடிக்கையால் தேவிபட்டினம் பஸ் நிலையம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இதனை ஆவலுடன் இந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செய்தி: தினத்தந்தி

ஓ காதல் கண்மனி - தமிழ் திரை விமர்சனம்

No comments :
இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ஓ காதல் கண்மணிகல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார்.

மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.திருமணம் தவிர்த்த வாழ்க்கையை விரும்பும் காதலர்களைத் திருமணத்தை நோக்கித் தள்ள அவர்களது குடும்பங் கள் செய்யும் முயற்சிகள் தோல்வி யடைகின்றன. ஆனால் தொழில் நிமித்தமாக ஏற்படும் பிரிவால் வரும் வேதனை அவர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவைக்கிறது. அதீத மான அன்புக்கும் சுதந்திர உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் எது வெல்கிறது என்ற கேள்விக்கான பதிலாக விரிகிறது படம்.

படம் முழுவதும் இளமைத் துள்ள லின் உற்சாக அதிர்வை உணர முடி கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் வசனங்கள், காட்சி யமைப்புகள், பி.சி. ராம் செதுக்கி யுள்ள ஒளி-நிழல் சித்திரங்கள் ஆகியவை இளமையின் உற்சாகத்தையும் அனை வருக்குமான அழகியலையும் ரசனை யோடு முன்வைக்கின்றன. லீலா சாம்சனிடம் நித்யா மேனன் பாடிக் காட்டும் இடத்தில் இயக்குநர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர் வைர முத்து ஆகிய மூவரும் இணைந்து இனிமை யான அனுபவத்தை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். நாடகத்தன்மை யைத் தாண்டியும் அந்தக் காட்சி நம்மை ரசிக்கவைக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் பின்னணி இசை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.

அகமதாபாதில் இஸ்லாமியக் கட்டிடக் கலையைப் பார்வையிடும் காட்சி அற்புதமானது. கம்பீரமான அந்தக் கட்டிடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் மனதில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன.

காதலை வெளிப்படுத்தும் காட்சி களில் இளமையும் ரசனையும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊரி லிருந்து அண்ணன் குடும்பம் வரும் சமயத்தில் துல்கருக்கு ஏற்படும் பதற்றத்தை வைத்து நித்யா மேனன் விளையாடும் இடம் அழகு. பேருந்து, ரயில் பயணங்களில் பொங்கி வழியும் காதல் உணர்வுகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சின்னச் சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளன. காதல் வளரும் விதம் இயல்பாக இல்லை என்றாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதத்தில் காதல் காட்சிகள் உள்ளன.

காதலர்களின் பிரிவுக்கான கார ணம், மனம் மாறுவதற்கான சூழல் ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சினைக்கு வருவதற்குத் திரைக்கதை ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதில் இரண்டாம் பாதியில் படம் மந்தமாகிறது. காதலின் ஈரத்தையும் காதலுக்குள் முளைக்கும் சண்டையையும் சமாதானத்தையும் சொல்லும் காட்சிகள் கடைசிவரை திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.

படத்தின் முக்கியமான பிரச்சினைகள் இவை அல்ல. மணிரத்னம் சமகாலப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுக் கிறார். அதைப் பெருமளவில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்துடன் சித் தரிக்கிறார். முரண்பாட்டை உருவாக்கி, வலுவான கதை முடிச்சாக மாற்றுகிறார். இந்த முடிச்சை அவிழ்க்கும் சவாலை எதிர்கொள்வதில் பலவீனமாக வெளிப் படுகிறார். புதியதொரு கேள்விக்குப் புதியதொரு பதில் இல்லை. பார்வை யாளர்களின் கற்பனைக்கு இடம் தரும் முடிவாகவும் அமையவில்லை. பழைய பதிலைத் தருவதில் தவ றில்லை. அந்தப் பதில் பாத்திரங்களின் அனுபவம் மூலம் வெளிப்படும் பதிலாக இருக்க வேண்டும். மாறாக, செயற்கையாக முன்வைக்கப்படும் பதிலாக இருக்கிறது. இதுதான் படத்தின் பலவீனம்.

மணிரத்னத்துக்கே உரிய ஒப்பனை களை மீறி வசனங்கள் பல இடங்களில் இயல்பாக இருக்கின்றன. ஒரு சர்டிஃபிகேட் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?” என்பன போன்ற கூர்மையான வசனங்களும் உள்ளன. திருமண பந்தத்தைத் தவிர்ப்பதற்கான காரணங்களைச் சொல்லியிருப்பது போலவே, திருமணம் தவிர்த்த வாழ்க்கை யில் இருவரும் ஏற்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் வசனங்கள் சொல்கின்றன.

ரசனையும் அலட்டிக்கொள்ளாத தன்மையும் கொண்ட பாத்திரத்தில் துல்கர் சல்மான் கச்சிதமாகப் பொருந்து கிறார். படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய பாத்திரம் இவருக்கு. கடைசிக் காட்சியில் மட்டும் மாறுபட்ட நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது. நித்யா மேனனின் துறுதுறுதோற்றமும் துள்ளல் நடிப்பும் படத்தின் சிறப்பம்சம். 

காதலின் வேகம், செல்லக் கோபம், சோகம் என எல்லா உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரகாஷ் ராஜும், லீலா சாம்சனும் படத் துக்குக் கூடுதல் பரிமாணத்தை வழங்குகிறார்கள்.
இளமைத் துள்ளல் படத்தின் மிகப் பெரிய பலம். எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கையாளும் விதம் பலவீனம்.