முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 21, 2015

சென்னை ENOAH நிறுவனத்தில் ".NET DEVELOPER" நேர்முகத்தேர்வு!!

No comments :
சென்னை ENOAH நிறுவனத்தில் ".NET DEVELOPER" நேர்முகத்தேர்வு!!

நகை திருட்டு - கீழக்கரையைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது!!

No comments :
கீழக்கரை அருகே ஆசிரியை வீட்டில் நகை திருடிய வழக்கில் 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஏர்வாடி அருகே உள்ள புதுமாயாகுளம் பகுதியை சேர்ந்தவர் கனகசபை மனைவி சுந்தரம்பாள். ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டுக்குள் கடந்த 4.5.2014 அன்று  மர்மநபர்கள் புகுந்து 10 பவுன் நகைகளையும் ரூ.20 ஆயிரம் பணத்தையும் திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

(File photo)

இதுகுறித்து ஏர்வாடி போலீஸார் வழக்குப் பதிந்து கீழக்கரை எஸ்.என். தெருவைச் சேர்ந்த சீனி முகம்மது மகன் முஹம்மது கானை கைது செய்து நகைகளை கைப்பற்றினர்.

அவர் அளித்த தகவலின் பேரில் மாயாகுளத்தை சேர்ந்த காஜா நஜ்முதீன் மகன் சேக்அலாவுதீன் (28), கீழக்கரை புதுத்தெரு நவாஸ்கான் மகன் செய்யது சாகுல்ஹமீது (25) ஆகிய இருவரையும் தேடிவந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை இவர்கள் இருவரையும் மாயாகுளம் பகுதியில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி தலைமையிலான போலீஸார் சென்று கைது செய்தனர்.

செய்தி: தினமணி


கீழக்கரை - இராமநாதபுர சாலையில் இன்று (21-4-2015) நடந்த விபத்து!!

No comments :
இன்று காலை 7.30 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், இராமநாதபுரத்திலிருந்து  தூத்துக்குடி நோக்கி வந்த சரக்கு லாரியும் காஞ்சிரங்குடி பஸ்டாப் விளக்கு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு லாரி ஓட்டுனர்களும் படுகாயம் அடைந்தனர்.



அங்கு இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்,  108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த லாரி ஓட்டுனர்களை இராமநாதபுரம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..

இதுகுறித்து கீழக்கரை காவல்துறை துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது.


நன்றி: கீழக்கரை நகர் நல இயக்கம்

துபாய் விழாவில் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் MLA!!

No comments :
அமீரகம் வருகைத் தந்துள்ள சமுதாயத்தின் மூத்த தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் M L A அவர்கள் நேற்று 20-04-2015 திங்களன்று இரவு 9:00 மணியளவில் துபை அல்முத்தினாவில் உள்ள அஸ்கான் D பிளாக்கில் தனது தொகுதிற்கு உற்பட்ட சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.




கடந்த நான்கு ஆண்டுகளாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தான் செய்த பணிகளை தொகுதியின் பொதுமக்களிடத்தில் விளக்கினார்,  தான் செய்த பணிகள்  நெடுஞ்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மீனவர்கள் நலம், அநீதிக்கு எதிரான போராட்டங்கள் என பற்பல பணிகளை சொல்லிக் காட்டினார். சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்

பின்னர் பேராசிரியர் அவர்களின் கையெழுத்தினால் உருவான நூல்கள் வெளியிட்டு விழாவும் நடைபெற்றது .

1. தித்திக்கும் திருப்பு முனைகள் -
மதுக்கூர் ஹாஜா வழங்க ஜாகிர் ஹுசைன் (MD POWER GROUPS OF COMPANY ) பெற்றுகொண்டார்.



2.  பாலஸ்தின வரலாறு
ஹமீது கக்கன் வழங்க பைஜுர் ரஹ்மான் (AYMAAN TRUST - WELFARE DEPT) பெற்றுகொண்டார் .



3. 40 ஹதிஸ்கள் 
மகாரும் காக்க வழங்க தவ்பீக் அவர்கள் பெற்றுகொண்டார் .





4.அகிலத்திக்கு அருட்கொடை அண்ணல் நபி ஸல் அலைஹிவசல்லம் .
சமீம் வழங்க சபியுல்லாஹ் அவர்கள் பெற்றுகொண்டார் . 



இந்நிகழ்வில் அமீரகத்தின் பல்வேறு பகுதிலிருந்து தமுமுக கொள்கை சகோதாரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.