முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 3, 2015

துபாய் Bitech Middle East நிறுவனத்தில் Sales Manager / Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Sales Manager / Engineer

Bitech Middle East

Dubai, UAE

Posted 11 days ago
Ref: QP052-01


The Role

Looking for an experienced and qualified Sales Manager / Engineer for a client of mine in the Steel Manufacturing & Construction related business:

The role is based in Dubai, UAE

The broad job description of the Sales Manager / Engineer is as follows:
- Strong experience in the construction industry, cement, building structure industry
- Developing a team
- Working with the GM on developing and implementation of the Sales strategy
- Reporting to the GM


Requirements

- Should have 5+ years of UAE experience in a similar role
- Knowledge of Steel Sheet Pile or Foundations
- Civil or Mechanical Engineering degree is mandatory
- Western and Arab expats preferred
- Salary depending on background and experience

About the Company

  • Decades of experience serving clients globally
  • Industry specific expertise
  • Value added recruitment and outsourcing
  • Outstanding service
  • Implementation experience
  • Customized pricing solutions
  • Blended delivery models
TO APPLY: CLICK HERE


சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர்!!

No comments :
சல்மானின் சகோதரர் மகனான உள்துறை அமைச்சர் முகமது பின் நயீஃப் புதிய பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய அரசரின் மகனான மொஹம்மது பின் சல்மான், பட்டத்து இளரசருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சவூதியின் அரசராக இருந்த அப்துல்லா மரணமடைந்ததையடுத்து தற்போதைய அரசரான சல்மான் ஜனவரி மாதத்தில் அரசராக முடிசூட்டப்பட்டார்.

முந்தைய அரசரான அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 2005ஆம் ஆண்டிலிருந்து அரசராக இருந்துவந்தார். தற்போதைய அரசரான சல்மான் முந்தைய நிலையிலிருந்து சில மாற்றங்களைச் செய்துவருகிறார்.

பட்டத்து இளவரசராக இருந்த மோக்ரின் பின் அப்துல் அஜீஸ் உள்பட முந்தைய அரசருக்கு நெருக்கமானவர்கள், ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

நயீஃப் ஏற்கனவே அமெரிக்காவுடன் நல்ல உறவுகளை பேணிவந்தவர் என்பதால், அவர் இளவரசராக அறிவிக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்கும்.

சவூதியின் பாதுகாப்புத் துறைத் தலைவரான அவர், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் போக்கைக் கடைப்பிடித்துவந்தார். 2009ஆம் ஆண்டில் அல் காய்தா அவரைக் கொல்ல முயற்சித்தது.

பட்டத்து இளவரசருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கும் முகமது பின் சல்மான், அரச குடும்ப வரிசையில் தொடர்ந்து மேலேறிவருகிறார்.


ஜனவரி மாதத்தில் அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஏமனில் சவூதி தலைமையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை அவர்தான் தற்போது மேற்பார்வையிட்டுவருகிறார்.


1975ஆம் ஆண்டிலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சௌத் எல் ஃபைசல், அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சவூதியின் அமெரிக்கத் தூதர் அடெல் ஜுபெய்ர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரச குடும்பத்தைச் சேராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களுக்கு "காயிதேமில்லத் பிறை" விருது!!

No comments :
விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா 02 .05.2015 மாலை நடைபெற்றது.

சென்னை பெரியார் திடலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மனிதநேயமக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களுக்கு காயிதே மில்லத் விருது வழங்கி சிறப்பிக்கபட்டார்.

ஒவ்வோர் ஆண்டும் இவ்விருதுகள், சமூகம், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் சிறப்பாகப் பணியாற்றும் சான்றோர் ஆறு பேரை அடையாளம் கண்டு வழங்கப்படுகிறது.அந்த வகையில், இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டது.


இதில் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்களுக்கு (காயிதேமில்லத்பிறை), விருதும், எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களுக்கு (அம்பேத்கர்சுடர்) விருதும் , கோவை கு.இராமகிருட்டிணன் அவர்களுக்கு (பெரியார்ஒளி)-விருதும், முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு (அயோத்திதாசர்ஆதவன்), விருதும்-அமரர் ஜி.கே.மூப்பனார் அவர்களுக்கு (காமராசர்கதிர்), விருதும்-முனைவர் ஔவை நடராசன் அவர்களுக்கு (செம்மொழிஞாயிறு) விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவனால் வழங்கப்பட்டது.


வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் மேற்கண்ட 6 நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்விற்க்கு பேராசிரியர் உடன் தமுமுக மாநிப்பொதுச்செயலாளார் காஞ்சி ப அப்துல்சமது, மாநில துணைத்தலைவர் குணங்குடி அனிபா மற்றும் தமுமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட தமுமுக மமக கழக சொந்தங்கள் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தி: விகளத்தூர் நியூஸ்