முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 5, 2015

துபாயில் அரேபியன் டிராவல் கண்காட்சி துவங்கியது!!

No comments :
துபாயில் நேற்று அரேபியன் டிராவல் கண்காட்சி நேற்று தொடங்கியது.

கண்காட்சி தொடங்கியது
அரேபியன் டிராவல் கண்காட்சி உலக வர்த்தக மைய கண்காட்சி அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 7–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட 86 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்த கண்காட்சி குடும்ப சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பெரும்பாலான மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க குடும்பத்தினர் 62 சதவீதம் பேர் தங்களது குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்கவே விரும்புகின்றனர். இதற்கு பெரும்பாலும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வதையே அதிகம் விரும்புவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


சுற்றுலா பயணிகளுக்கான தகவல்கள்
இந்த அரேபியன் டிராவல் கண்காட்சி 22–வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறை அலுவலகங்கள், விமான நிறுவனங்கள், டிராவல் நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
இதேபோல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் முக்கிய சுற்றுலா தளங்களின் விவரங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

துபாய் Arenco Real Estate நிறுவனத்தில் Clerk வேலை வாய்ப்பு!!

No comments :
Urgently looking to recruit Leasing Clerk for Arenco Real Estate Dubai.
Arenco Real Estate - Dubai

Job Responsibility:
Renewal Follow ups
Lease Raising and printing
Reconciliation of Ejari
Timely dispatch & collection of Lease
Filing Management
Handling other Correspondence in Leasing
Candidate Requirement:
Commerce Graduate
Experience in Real Estate Leasing
Kindly send your CVs to sana@aaagroup.ae

மே 15 முதல் ராமநாதபுரத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி!!

No comments :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 15 ஆம் தேதி முதல் ராமநாதபுரத்தில் தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களில் பல்வேறு நபர்கள் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தட்டச்சர்களாக பணிநியமனம் பெற்றுள்ளனர்.

இப்பயிற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்பட உள்ள குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 15 ஆம் தேதி முதல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வார நாள்களில் செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.


இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மார்பளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04567-221160 அல்லது 86086-82791 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கீழக்கரை அருகே கோவில் நகையை திருடிய 3 நபர்கள் கைது!!

No comments :
கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் பகுதியில் சாமி சிலையில் ஒரு பவுன் தாலி சங்கிலியை திருடிய 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் பகுதியில் சந்தன மாரியம்மன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் சாமிக்கு அணிவித்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலி திருடு போனது. இது குறித்து கிராமத் தலைவர் நாகலிங்கம் மகன் முனியாண்டி (65) ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.



இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏர்வாடி பகுதியில் காவல் ஆய்வாளர் பால்பாண்டி, உதவி ஆய்வாளர்கள் தங்கசாமி, கோட்டைச்சாமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த வாலிநோக்கம் மீனவர் காலனி செய்யது (24), ஹாஜாமுகைதீன் (28), தெளலத்கான் (26) ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது இவர்கள் கோயில் சிலையில் தங்கத் தாலி சங்கிலியை திருடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த போலீஸார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தி: தினமணி