முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 16, 2015

கத்தார்-ல் நெல் பயிர்ட்டு அறுவடை செய்து இந்தியர்கள் சாதனை!!

No comments :
கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல் தோசரி பூங்காவின் ஒரு பகுதியில் பாலைவன நிலத்தை விவசாய நிலமாக மாற்றி பலவிதமான காய்கறிகளோடு அப்பகுதியிலேயே நெல் விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.


கத்தார் வாழ் கேரளாவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்துநம்முடே அடுக்களதோட்டம்என்ற குழுவை உருவாக்கி பேஸ்புக்கிலும் இதற்கான உறுப்பினர்களை இணைத்தனர். இந்த குழுவில் முக்கிய பங்காற்றும் பினு மாத்திவ்,ஜிஷா கிருஸ்ணா, மீனா பிலிப் ஆகியோருடன், கத்தாரில் வசிக்கும் 600க்கும் மேற்பட்டோரும் இணைந்தனர். 



இதற்காக 6 மாதங்களுக்கு முன்பு தோஹா அருகே அல்தோசரி பூங்கா பகுதியில் இதற்கான விவசாயத்துக்கு ஏற்ற நிலம் உருவாக்கப்பட்டு நெல் பயிரிடப்பட்டதோடு, 30 வகையான காய்கறிகளும் பயிரிடப்பட்டன

இதற்கான நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்தது. காய்கறிகளும் நன்கு விளைந்தன. நெற் பயிர்களும் நன்கு வளர்ந்து தற்போது நெல் அறுவடையும் நடைபெற்றது. 


இதற்கான நிகழ்ச்சியில்கேரள விவசாய அமைச்சர் கே.பி.மோகனன் மற்றும் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். கத்தாரில் நெல் பயிரிடுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது


இதனை உருவாக்கிய கத்தாரில் வாழும் இந்தியகுழுவினர் கூறுகையில், ‘‘கடின உழைப்பு, கூட்டு முயற்சி மூலம் இந்த பசுமை கனவை நிறைவேற்றி உள்ளோம். அல் தோசன் பூங்கா நிர்வாகத்தினர் எங்களுக்கு முழு ஆதரவை அளித்துள்ளனர்’’ என்றனர்.

படங்கள்” தினகரன்

செய்தி பகிர்வு: திரு.பைசுர்ரஹ்மான், துபாய்