முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 17, 2015

துபாய் happy life reinforced plastic நிறுவனத்தில் Administrative Assistant வேலை வாய்ப்பு!!

No comments :

Details:Posted on: 16th May 2015

  • Company Name:happy life reinforced plastic FZCO
  • Employment Type:Full Time
  • Monthly Salary:2,000 - 3,999 AED
  • Minimum Work Experience:0-1 Years
  • Minimum Education Level:Bachelors Degree
  • Listed By:Employer
  • Company Size:51-200 Employees
  • Career Level:Mid-level



Description:

we need a administration assistant with good attitude in the daily work. Good English speaking and hard work is necessary,better with driving licence.sir and madam both are OK.living in international city is better. bachelor degree is necessary.
TO APPLY: CLICK HERE

சென்னையில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா!?? ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா!!

No comments :
சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரும் அவரது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அவரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனால் அவர் மீண்டும் முதல்வராவதில் இருந்த சட்டச்சிக்கல் தீர்ந்தது. எனவே, எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், பின்னர் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் ஜெயலலிதா சட்டசபைஉறுப்பினர் ஆவார் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில், ஜெயலலிதா சென்னைத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாயின. தற்போது இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரும் உடனடியாக அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவே நேரில் அழைத்து வெற்றிவேலை ராஜினாமா செய்யச் சொன்னதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ராஜினாமா செய்த வெற்றிவேல் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்தவர் வெற்றிவேல். பின்னர் அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது அவரது பதவி விலகல் மூலம் சென்னையில் ஜெயலலிதா போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. தொகுதி காலி - அதி வேக அறிவிப்பு! ராஜினாமா ஏற்ற கையோடு இதுதொடர்பான அறிவிக்கையையும் சபாநாயகர் தனபால் அவசரமாக வெளியிட்டார். மேலும் தொகுதி காலியாக இருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.


தொகுதி காலியாகி விட்டால் அங்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாகவே வெற்றிவேல் ராஜினாமா, அதை சபாநாயகர் வேகமாக ஏற்றது, தொகுதி காலியாக இருப்பதாக வேகமாக அறிவித்தது ஆகியவை நடந்தேறியுள்ளதாக கருதப்படுகிறது.

புறம்போக்கு என்ற பொதுவுடைமை - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா

ஒளிப்பதிவு: என் கே ஏகாம்பரம்

இசை: ஸ்ரீகாந்த் தேவா & வர்ஷன்

தயாரிப்பு: எஸ்பி ஜனநாதன் - சித்தார்த் ராய் கபூர்

எழுத்து - இயக்கம்: எஸ்பி ஜனநாதன்

பொதுவுடைமை என்ற சொல்லை ஏதோ தீண்டத் தகாத ஒன்றாகத்தான் தமிழ் சினிமா பார்த்துவந்தது. எப்போது அரிதாக சில குறிஞ்சிகள் பூக்கும், ஆனால் கவனிக்கப்படாமல் போகும் சோகம் தொடரும். ஆனால் எஸ்பி ஜனநாதன் அதே பொதுவுடைமைக் கருத்துக்களை இன்றைய வணிக சினிமாவில் குறைந்தபட்ச சமரசங்களோடு சொல்லி வெற்றியைப் பெற்று வருகிறார்.

இந்த பனிரெண்டு ஆண்டுகளில் நான்கு சினிமாக்களை மட்டுமே எடுத்துள்ள அவர், அவற்றில் மூன்று படங்களில் பொதுவுடைமை சித்தாந்தத்தை இலைமறை காயாக வைத்திருக்கிறார். புறம்போக்கு என்கிற பொதுவுடைமை   இந்த புறம்போக்கு எனும் பொதுவுடைமை ஒரு நக்ஸலைட் இயக்கத்தைப் பின்புலமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஆர்யா, மனித வெடி குண்டாகச் செயல்பட்டதாகக் கூறி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு, குற்றங்களை ஒழிக்க சரியான தண்டனை தூக்குதான் என நம்பும் காவல் அதிகாரியான ஷாமுக்கு. ஆர்யாவுக்கு தூக்கு மாட்டும் வேலையைச் செய்ய விஜய் சேதுபதியைத் தேடிப் போகிறார்கள். அவரோ அந்த வேலையை வெறுத்து ஒதுங்கி, சதா போதையில் மிதக்கிறார். அவரிடம் ஷாம் விஷயத்தைச் சொல்லி, சிறைக்கு அழைக்கிறார். ஆனால் மறுக்கும் விஜய் சேதுபதி, கார்த்திகாவைச் சந்தித்த பின்னர் அந்த வேலைக்கு ஒப்புக் கொள்கிறார்.


ஏன் ஒப்புக் கொண்டார்? ஆர்யாவுக்கு தூக்கை நிறைவேற்றினார்களா இல்லையா? என்பதை கட்டாயம் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். கலை என்பது மக்களுக்கானது என்ற பொதுவுடைமைத் தத்துவத்தை ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜனநாதன். கூடவே தமிழ் தேசிய உணர்வையும் ஆங்காங்க குறியீடுகளாகக் காட்டியிருக்கிறார். ஒரு அப்பாவி இளைஞனை கற்பழிப்புக் குற்றத்தில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தி, அடித்தே அவன் செய்யாத குற்றத்தைச் செய்ய வைத்து நீதிமன்றத்தில் நிறுத்த, அங்கே அவனை நிரபராதி என நீதிபதி அறிவிக்கும்போது, அந்த நிரபராதி கேட்கும் கேள்விகள் இந்த நாட்டு சட்ட நடைமுறை மீது விழும் சவுக்கடிகள்.

தமிழ் சினிமாவில் ஒருபோதும் பார்க்க முடியாத சர்வதேச அரசியல், போராளிகள் பக்க நியாயங்களை தன் பாணியில் சொல்லிப் போகிறார் ஜனா. ஆர்யாவுக்கு இது மிக முக்கியமான படம். அழுத்தமான காட்சிகளால் மனதில் இடம்பிடிக்கிறார். குறிப்பாக, தனக்கான தூக்குக் கயிறை தானே சோதித்துப் பார்க்க முயலும் அந்தக் காட்சி. ஆனால் வசன உச்சரிப்பில் இன்னும் கம்பீரம் இருந்திருக்கலாம். எமலிங்கமாக வரும் விஜய் சேதுபதியை சமூகத்தின் மனசாட்சியாக்கி திருப்பிக் கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர். உணர்ந்து நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. என்ன ஒரு அற்புதமான நடிகன்! கிட்டத்தட்ட வில்லன் ரேஞ்சுக்கு இருந்தாலும், ஷாம் மிரட்டியிருக்கிறார் நடிப்பில்.

இந்த நல்ல நடிகனை தமிழ் சினிமா இத்தனை காலம் எவ்வளவு வீணடித்திருக்கிறது பாருங்கள்! கார்த்திகாவுக்கு இனி இதுபோல ஒரு வேடம் அமையுமா தெரியவில்லை. போராளிப் பெண்ணாக மாறியிருக்கிறார். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என் கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் அத்தனை இயல்பாக, நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். வர்ஷனின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஓகே என்றாலும், எல்லாக் காட்சிகளையும் இப்படி இசையால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன...

மவுனமும், இயற்கையின் ஒலிகளும் கூட இசைதானே! படத்தின் வசனங்களை தனி புத்தகமாகப் போட்டுத் தரலாம். ஒலிச் சித்திரமாக வெளியிடலாம். இத்தனைக்கும் எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லை. ஸ்ட்ரெயிட் ட்ரைவ்! முதல் பாதியை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம். மக்கள் விழிப்புணர்வை, இந்த சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வை மனதில் வைத்து படமெடுக்கும் இயக்குநர்களில் யாரையாவது காட்டச் சொன்னால் எந்தத் தயக்கமும் இன்றி எஸ்பி ஜனநாதனைக் கை காட்டலாம். போங்க மக்களே..


இந்த புறம்போக்கை பார்க்க அவசியம் போங்க!

விமர்சனம்: ஒன் இந்தியா




ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்க தடை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவிழாக்கள், திருமணங்கள், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரப் பலகைகள், தட்டி போர்டுகள் ஆகியன வைப்பதை ஒழுங்குபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள்,தட்டி போர்டுகள் வைத்திட விரும்புவோர் அரசு அனுமதி பெற வேண்டும். என்ன நோக்கத்திற்காக

விளம்பரப் பலகை வைக்கப்படுகிறது, அளவு, எந்த இடம், வைக்கப்படும் இடம் யாருக்கு சொந்தமானது, விளம்பரப் பலகையில் இருக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காவல்துறை ஆய்வாளர் அல்லது துணைக் கண்காணிப்பாளருக்கு 10 நாள்களுக்கு முன்பாக விண்ணப்பம் அளித்திட வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்குவர். அனுமதி கிடைத்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியினருக்கு காவல்துறையின் பரிந்துரைக் கடிதத்துடன் மனு அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் பெறப்படும் மனுக்கள் அப்பகுதிகளுக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விளம்பரக் கட்டணத்தை செலுத்தி ரசீது மற்றும் காவல்துறையினரின் பரிந்துரை ஆகியவற்றுடன் ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(கட்டப்படும் கட்டணங்கள் திருப்பித் தரப்படமாட்டாது) ஆட்சியருக்கு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய அனுமதி வழங்கப்படும்.

தாமதமாக தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அனுமதி பெறப்பட்டு வைக்கப்படும் விளம்பரப் பலகைகளில் அடியில்ஒரு அங்குல அளவுக்கு ஆட்சியரின் அனுமதி எண்ணைக் குறிப்பிட வேண்டும்.  அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படும்.

அகற்றுவதற்கு ஆகும் செலவினத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யப்படும். அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்களை அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைந்தவுடன் உடனடியாக அகற்றிவிட வேண்டும். இம்மாதம் 25 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியரின் அனுமதியில்லாமல் எந்த விளம்பரப் பலகைகளும் வைக்கக் கூடாது.


இதனை மீறுபவர்கள் மீது சட்ட விதிகளுக்கு உள்பட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுர வங்கியில் தீ விபத்து!!

No comments :
ராமநாதபுரம் நகர் கேணிக்கரை பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்தது.


கேணிக்கரை பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் பேங்க் ஆப் பரோடா கிளை உள்ளது.  இவ்வங்கியின் அலுவல் நேரத்தில் திடீரென வங்கியிலிருந்த 3 பேட்டரிகள், இன்வெர்ட்டர்கள் ஆகியன தீப்பிடித்து எரிந்தன. 

இதனால் வங்கி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வங்கியை விட்டு வெளியேறினர். தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி, நிலைய அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமûடைந்திருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

செய்தி: தினமணி