முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 24, 2015

கீழக்கரையில் இன்று (24-5-2015) அம்மா உணவகம் திறப்பு!!

No comments :
தமிழகம் முழுவதும் கட்டி முடித்து திறப்பு விழாவுக்காக காத்துக் கிடக்கும் 150 அம்மா உணவகங்கள் மற்றும் அம்மா இலவச மருந்தகங்களை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதற்கு ஏழைத் தொழிலாளர்கள்கூலித் தொழிலாளர்கள்வேலைக்குச் செல்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கீழக்கரையில் திறக்கப்பட்ட அம்மா உணவக நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். நகர்மன்றத்தலைவி திருமதி. ராபியத்துல் காதிரிய்யா மற்றும் பலர் முன்நின்று நிகழ்ச்சியை சிறப்ப்புற நடத்தினர். 





சென்னையில் மட்டும் 50 அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டன. அதேபோல காஞ்சிபுரத்தில் 13 உணவகங்கள் திறக்கப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த அம்மா உணவகம். அம்மா திட்ட வரிசையில் முதல் திட்டம் இந்த அம்மா உணவகம்தான்.

படங்கள்: திரு. சுரேஷ் ராஜேந்திரன்
கீழக்கரை




துபாய் Technomak Group நிறுவனத்தில் Procurement Officer வேலை வாய்பு!!

No comments :
Procurement Officer
Technomak Group - Dubai

- Bachelors level qualified
- Minimum experience of 2 - 4 years with interior fit-out companies
- UAE experience is mandatory
- Available to join immediately
Required experience:
  • Procurement: 4 years





TO APPLY: CLICK HERE



கீழக்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை: அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!!

No comments :
கீழக்கரையில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் முருகேசன் எச்சரித்துள்ளார்.


இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கீழக்கரை நகராட்சிப் பகுதியில் நடைபெறும் திருமணம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்காக வைக்கப்படும் டிஜிட்டல் விளம்பர பேனர்கள், தட்டி போர்டுகளுக்கு அனுமதி பெறவேண்டும்.




இது குறித்த மாவட்ட கலெக்டர் அறிவிப்பு படிக்க: இங்கு க்ளிக் செய்யவும்

விளம்பரம் குறித்த நோக்கம், அளவு, வரைபடத்துடன் கூடிய இடங்கள், வாசகங்கள் ஆகியவற்றை பத்து நாள்களுக்கு முன்பாக காவல் துறையில் விண்ணப்பிக்க வேண்டும். காவல் துறையின் அனுமதி கிடைத்தவுடன், பரிந்துரை கடிதத்துடன் நகராட்சியில் மனு செய்திட வேண்டும். பின்னர், அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விளம்பரக் கட்டணத்தை செலுத்தி, ரசீதுடன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரத்தில் ஒரு அங்குல அளவுக்கு அனுமதி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.


குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பேனரை அகற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி: தினமணி

கீழக்கரையில் ஓர் புதிய உதயம் - “ஃபில்ஷா புர்கா ஸ்டோர்ஸ்”

No comments :
கீழக்கரையில் பெண்கலுக்கான பிரத்யோக ஆடைகளுக்கான புதிய ஷோரூம், வள்ளல் சீதக்காதி சாலையில் V.A.O சாவுடி அருகில் திறக்கப்பட்டுள்ளது.


இந்த ஷோரூமில், பெண்களுக்கான புர்கா மற்றும் வெளிநாட்டு பொருட்கள் இங்கு கிடைக்கும்.



இது குறித்து பில்ஷா (FILZA) கடையின் உரிமையாளர் ஜனாப்.பாதுஷா அவர்கள் கூறியதாவது:

நாங்கள் பெண்கள் அணியும் புர்காவகையில் பல டிசைன்களில் வெளிநாட்டு மாடல்களில் வளைகுடா நாடுகளில் தயாராகும்
, துபாய்,சவூதி போன்ற நாடுகளில் விற்பனையாகும், புர்காவை இங்கு இறக்குமதி செய்து பெண்களுக்கு விற்பனை செய்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு வகை சென்ட்,அக்தர்கள்,ஊது போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் தாவணிகள்,ஷால்,அபாய போன்றவை என்னற்ற டிசைன்கள் இங்கு விற்கப்படுகிறது.

தேவைகளுக்கு ஏற்ப “ஆர்டர்”ன் பேரில் தையல் செய்தும் தரப்படும்.

அனைவரும் ஒத்துழைப்பு தந்து எங்கள் வியாபர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாரும், ”துஆ” - பிராத்தனை செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.

முகவை முரசு சார்பாக வியாபாரம் சிறக்க வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.