முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 25, 2015

துபாய் Paris Group நிறூவனத்தில் Purchasing Coordinator வேலை வாய்ப்பு!!

No comments :

Purchasing Coordinator
Paris Group International LLC - Dubai

Qualifications:
Filipino
Female only
Assist in development and implementation of purchasing procedures.
1.Assist in the purchase of materials and equipment for the district by competitive bids, competitive
sealed proposals, requests for proposals, government catalog contract purchases, informal quotations,
and negotiations following established district criteria and state purchasing rules.
2. Assist in the preparation of all bidding documents, including notice and instructions to bidders,
specifications, and form of proposal.
3. Assist in receiving and evaluating formal bids and make recommendations for the award of contracts
to business manager for school board approval.
4. Assist in obtaining and studying comparative prices and quotations. Make purchasing decisions based
on information obtained.
5. Initiate contact with vendors to check on supply and equipment availability, invoices, purchase
orders, and contracts.
6. Prepare purchase orders and review for accuracy.
7. Detect, research, and resolve purchasing issues and problems with incorrect orders, invoices, and
shipments.
8. Approve purchase orders and monitor all purchase requisitions to determine correctness of
information, calculations, coding, etc.
9. Administer contracts and handle adjustments with suppliers, including replacement of material not
conforming to specifications, cancellation of orders, and ensuring receipt of proper credit.
10. Maintain and prepare district’s depreciable assets list including depreciation schedule.
11. Maintain district procurement cards, petty cash and meal monies.
Required experience:
  • Purchasing: 2 years
TO APPLY: CLICK HERE

கீழக்கரை வடக்குத்தெரு கவுன்சிலரின் புகார் மற்றும் அறிக்கை!!

No comments :


கீழக்கரை வடக்குத்தெரு கழிவுநீர் அகற்றும் மோட்டார் மற்றும் ஜெனரேட்டர் பழுதுபார்க்க கவுன்சிலர் மனு.


இது சம்பந்தமான கவுன்சிலரின் அறிக்கை:
ஆறு வார்டுகளிலிருந்து வரும் கழிவு நீர் சேருமிடம் தட்டாந்தோப்பு. படத்தில் உள்ளது தான் அந்த பம்பிங் ரூம்..அதில் 10hp மோட்டார் ஒன்றும்.5 hp மோட்டார் ஒன்றும் உள்ள்து.



மின்சாரம் இல்லை என்றால் ,அதை இயக்குவதற்கு ஒரு ஜெனெரேட்டர் ஒன்று தனியாக உள்ள‍து.

சில தினங்கலுக்கு முன்பு 10hp மோட்டார் பழுதடைந்தது..இதனால்தான் 20வது வார்டு வாழைக்கொல்லையில் தண்ணீர் வெளியேரியது உடனே நான் கமிஸ்ன‌ருக்கு தகவல் கொடுத்தேன்.பிற‌கு மனு அளித்தேன்.எனது கோரிக்கையை ஏற்று10hp மோட்டார் பழுதுபார்க்கப்பட்டது. தற்போது அந்த‌ இடம் சீராக உள்ள‍து.

மின்சாரம் இல்லை என்றால் ஓடும் ஜெனெரேட்டர் மூலமாக இது இயக்கபட வேண்டும் ஆனால் ஜெனெரேட்டர் தற்போது பழுதடைந்துள்ள‍து. அந்த கழிவுனீர் ரூமில், உள்ள‍ 5hp மோட்டாரும் பழுதடைந்துள்ள‍து.
ஜெனெரேட்டரையும் 5hp மோட்டாரையும் பழுதுபார்த்து தரும்படி சேர்மனிடமும், SI தின்னாயிரமூர்த்தியிடமும், C.முருகேசன் கமிஸ்னரிடமும், து..மே.மனோகரனிடமும் பலமுறைகூறியும் இன்னும் 
பழுதுபார்க்கவில்லை.

தயவு செய்து நண்பர்களாகிய‌ நீங்கள் நகராட்சி நிர்வாகிகள் / அலுவலர்களை
  தொடர்புகொண்டு வார்டு கவுன்சிலர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூறுங்கள்.

கவுன்சிலராக இருந்தாலும் சரி .இல்லை என்றாலும் சரி என்னுடைய
 25 வருடம் மக்கள் பணி தொடர்ந்துக்கொண்டேயிருக்கும்.
மக்கள் பணியில் குறை இருந்தால் கூறுங்க‌ள் சரி செய்வோம்.பிழை இருந்தால் மன்னிக்கவும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

செய்தி: திரு ஹாஜா நஜ்முதீன்,

20ம் வார்டு கவுன்சிலர், கீழக்கரை



என்று தணியும் “இன்ஞ்னீயரிங்” மோகம்??

No comments :


(பொறியியல் படிப்பு தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சிறந்த கல்லூரிகள் தேர்ந்தெடுத்தல் மிக மிக அவசியம்.
வெறும் “கால் செண்டர்”களில் காம்பஸ் வேலை வாங்கி கொடுக்கும் கல்லூரிகளில் ஏமாற வேண்டாம்)

நாட்டில் கல்வியின் நிலை உயர்ந்திருப்பதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால், கொடுமை என்னவெனில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் நிலை உயரவில்லை. கல்வி தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் தரம் உயரவில்லை. அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் தரம் அடிமட்டமாக இருக்கிறது. 


அரசாங்கம் ஒரு குழு அமைத்து, தமிழகத்தில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தரத்தை முறையாக ஆராயும் பட்சத்தில் (நேர்மையாக), 500-ல் 50 கூட மிஞ்சாது என்பது மிகுந்த வேதனைக்குரிய, மறுக்க முடியாத உண்மை. மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி பணம் சேமிக்கும் கஜானாவாக மட்டுமே செயல்படுகின்றன கல்லூரிகள். ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்குகிறது அரசு. ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் முதலாம் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் மாணவர்கள், கல்லூரியின் செயல்பாடுகளால் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. 

அத்தகைய மாணவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் பாதியைக்கூட கல்லூரி விரிவுரையாளர்களால் பூர்த்திசெய்ய முடிவதில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள்தானே!

''
ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளிவரும் பொறியாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர் களிடம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான தகுதி இருப்பதில்லை" என்கிறது அந்த நிறுவனங் களின் அறிக்கை. அப்படி வெளிவரும் 80 சதவீதம் பேரும், சில மாதங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டு நிறுவனங்களின் வாசல்களில் குடியிருந்து, தகுதியற்றவர்கள் எனக்கூறி துரத்தப் படுகின்றனர்.
அவ்வாறு துரத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?


ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் எம்.இ அல்லது எம்.டெக் மேற்படிப்பில் சேருவதுதான். காரணம், இரண்டு வருட படிப்பை முடித்துவிட்டால், ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதுதான். சேர்ந்தவுடன் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். இது போதாதா..? ஒருசிலர் இதில் விதிவிலக்கு. பள்ளிப்பிராயத்திலிருந்தே விரிவுரையாளர் பணியை விரும்பி பயின்று விரிவுரையாளர்களாக ஆகிறார்கள்.

இன்று பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்(!) வாத்தியார்களில் பெரும்பான்மை யானவர்களின் கதை இதுவாகவே இருக்கும். நிறுவனங்களால் பொறியாளராகப் பணிபுரிய தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி புதிய திறமையான பொறியாளர்களை உருவாக்குவார்கள்? 

இது 'விரிவுரையாளர்' என்ற பெயரில் அடுத்தவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் செயல்தானே?. ஒருவர் 10 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார், அந்த 10 பேர் சில வருடங்களில் 100 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார்கள். இதற்கொரு முடிவே இல்லையா? இதையெல்லாம் யார் கேட்பது?


அந்தக் காலத்தில் ஆசிரியராக சேவைபுரிய ஆசைப்பட்டு, லட்சியமாகக்கொண்டு ஆசிரியர்களாக சேவை புரிந்தவர்களே அதிகம். ஆனால் இன்று, வேறு வழியில்லாமல், எளிமையான வழி என்று ஆசிரியப் பணி யைத் தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். இது பொறியியல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.


இதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், ஒவ்வொரு வருடமும் கவுன்சிலிங்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீட்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக 'வருத்தம் கொள்கிறது' அண்ணா பல்கலைக்கழகம். 

பொறியாளர்களின் எதிர்காலம் குறித்த இந்த பிரச்னையில் அரசு கவனம் செலுத்தவேண்டியது அவசியம்!

-
கே.பி. மதிவாணன் B.E.

பொறியியல் படிப்பு தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சிறந்த கல்லூரிகள் தேர்ந்தெடுத்தல் மிக மிக அவசியம்.
வெறும் “கால் செண்டர்”களில் காம்பஸ் வேலை வாங்கி கொடுக்கும் கல்லூரிகளில் ஏமாற வேண்டாம்.

- முகவை முரசு அணி




தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ் – ஹிந்தி திரை விமர்சனம்

No comments :




தனு வெட்ஸ் மனு முதல் பாகத்தில் தனு (கங்கனா )வும், மனு (மாதவன்)வும் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர். இரண்டாம் பாகம் அவர்களது திருமண வாழ்க்கையை 4 வருடங்கள் கழித்து இருவரும் திரும்பிப் பார்ப்பதாக அமைந்திருக்கிறது. படம் ஆரம்பிக்கும் போது இருவரும் மருத்துவர் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். இருவர் முகங்களிலும் இறுக்கம் நிறைந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ காரணமாக திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு மனதளவிலும் இருவரும் பாதிக்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கிற்காக இருவரும் லண்டன் சென்று திரும்பும் போது தனு தனது முன்னாள் காதலனை பார்க்க மனு டட்டூவை (தோற்றத்தில் கங்கனாவை போலிருக்கும்) சந்தித்து காதலில் விழ, முடிவை சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

படத்தில் இரு வேறு விதமான நடிப்பிலும் வித்தியாசத்தைக் காட்டி நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். தாம் தூம் படத்தில் லூசுப் பெண்ணாக நடித்த கங்கனாவா இது. படமானது மிக எளிதாக பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தரப் போகிறது.

அநேகமாக் குயீன் படத்தின் விருதுகள் இந்தப் படத்தின் விருதுகளால் முறியடிக்கப் படலாம்,தனியாளாக படத்தைத் தூக்கி தன் தோள்களில் சுமந்திருக்கிறார்.

மீண்டும் வெள்ளித் திரையில் மாதவன் எந்த விதமான அலட்டலும் இல்லாமல் மிக எதார்த்தமான நடிப்பால் மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார் மேடி.

படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்க்கு ஹாட்ரிக் வெற்றி கிட்டியுள்ளது இந்தப் படம் மூலம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் படாவிட்டால் என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் துணிந்து நின்று ஜெயித்திருக்கிறார்.

ஹிமான் சூர் சர்மாவின் கதை வசனத்தில், ராஜசேகரின் பாடல்கள் மற்றும் தனிஷ்க் அண்ட் வயுவின் இசை இவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பாடல்கள், வசனம், இசை என அனைத்தையும் சரியான கலவையில் கொண்டு வந்து மிக்சிங் அண்ட் மேட்சிங்கில் ஜொலித்திருக்கிறார் ஆனந்த்.

குடும்பக் கதை அல்லவா. ஆங்காங்கே கொஞ்சம் செண்டிமெண்ட் ,கொஞ்சமே கொஞ்சம் எமோசனல் என படம் முழுவதும் தூவி விட்டிருக்கிறார்கள்.நோ பன்ச் டயலாக் நோ குத்துப் பாட்டு...இந்திய சினிமா வளர்கிறதே மம்மி!.

தாராளமா குடும்பத்தோட உக்காந்து பாக்கலாம் பாஸ் இன்னும் டிக்கெட் புக் பண்ணலன்னா பர்ஸ்ட் போய் பண்ணுங்க.. தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்கள்...!

விமர்சனம்: இன் இண்டியா

IPL 2015 : மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி!!

No comments :

ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.10 கோடி பரிசை தட்டிச் சென்றது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அதிகப்படியான ஸ்கோர் அடித்ததற்காக ஆரஞ்சு தொப்பி பரிசு பெற்றார். மொத்தம் 14 இன்னிங்சுகளில் அவர் 562 ரன்களை விளாசியிருந்தார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா கலர் தொப்பி விருதை சென்னை அணியின் ட்வைன் பிராவோ தட்டிச் சென்றார். அவர், 16 இன்னிங்சுகளில் 26 விக்கெட்டுகளை சாய்த்தார். டெத் ஓவர்களில் சிறந்த பவுலிங் பங்களிப்பையும் அளித்தார்.

அதிகப்படியான சிக்சர்கள் விளாசியதற்காக பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் பரிசு பெற்றார். அவர் மொத்தம் 38 சிக்சர்களை விளாசியிருந்தார்.

சிறந்த இளம் வீரருக்கான விருது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. 20 வயதான இந்திய வீரரான இவர் 14 போட்டிகளில் ஆடி 439 ரன்களை வாரிக் குவித்தார்.

மேன் ஆப் தி பைனல் விருது மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்து அணியை வெற்றிபெறச் செய்ததற்காக அவருக்கு இருந்த விருது கிடைத்தது.

வம்பு தும்பு செய்யாமல், ஒழுக்கமாக, சமத்தாக ஆடியதற்கான விருது ஃபேர்பிளே விருதாகும். இந்த விருது வழக்கம்போல சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்குதான் கிடைத்தது. இத்தனைக்கும் கேப்டன் டோணி, அம்பயர் முடிவை விமர்சனம் செய்து அபராதத்திற்கு உள்ளாகியிருந்தார். ஆனால், பிற அணிகள் இதைவிட அதிக வம்புகளை செய்திருந்தது.

ஐபிஎல் சீசன் 8ல், சிறந்த கேட்ச்சுக்கான விருதை சென்னை வீரர் பிராவோ தட்டிச் சென்றார். பல்வேறு அருமையான கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லையில் பிராவோ பிடித்த அருமையான கேட்சுக்காக இந்த விருது கிடைத்தது.

கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல், மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இவர் ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்தார். இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.