முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 6, 2015

கத்தார் நாட்டில் விபத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது இனி தண்டனைக்குரிய குற்றம்!!

No comments :
கட்டார் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களை புகைப்படமெடுத்து, அதனை Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது, இனிமேல் தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்திருக்கிறார்கள். 

இது சம்பந்தமான செய்தியை கடந்த (04.06.2015) வியாழக்கிழமை தோஹா நியூஸ் ஊடகத்தில் காணலாம்.



குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் மீது மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை / QR100,000 ($27,460) அபராதம் விதிக்கப்படும்.

இத் தகவலை கத்தாரில் வசிக்கும் உங்கள் உறவினர், நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

செய்தி: திரு. ரிஷான், கத்தார்

காக்கா முட்டை - தமிழ் திரை விமரசனம்!!

No comments :
தமிழ்த் திரையுலகில் இதுவரை எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், குடிசைப் பகுதி மக்களின் வாழ்வியலையும், ஏழைச் சிறுவர்களின் ஆசைகளையும் இவ்வளவு யதார்த்தமாக சொன்ன படம் இதுவரை வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அறிமுகப் படத்தில் பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்க வேண்டும், ஒரு ஆக்ஷன் படத்தை இயக்க வேண்டும், காதல் படத்தை இயக்க வேண்டும், இளைஞர்களைக் கவரும் விதத்தில் கிளாமரான காட்சிகளை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இந்தப் படத்தின் இயக்குனர் மணிகண்டன் மிகப் பெரும் மாற்றத்தைக் கொடுக்கும் இயக்குனராகவே தெரிகிறார்.

பொதுவாக, விருது பெரும் படங்கள் என்றாலே அதற்கென தனி பார்வை ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஆனால், இந்தப் படம் அதையும் மீறி அனைவரையும் கவரும் விதமாகவே அமைந்துள்ளது. படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு முதல், கதைக் களம், உருவாக்கம் என ஒவ்வொரு விஷயத்திலும் மணி மணியாய் உழைத்திருக்கிறார் மணிகண்டன்.
சென்னையிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் மாமியார், இரு மகன்கள் ரமேஷ், விக்னேஷ் ஆகியோருடன் வசித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய கணவர் ஏதோ ஒரு குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். எப்படியாவது கணவனை விடுவித்து கொண்டு வரும் முயற்சியில் அவர் இருக்கிறார். இவருடைய மகன்கள் இருவரும் அவர்கள் பகுதியில் புதிதாகத் திறந்துள்ள பீட்சா கடையில் நடிகர் சிம்பு பீட்சா சாப்பிடுவதைப் பார்த்து அதை தாங்களும் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கான பணத்தைச் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் விரும்பிய பீட்சாவை சாப்பிடுவதற்குள் அவர்கள் எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் ஹீரோக்களாக அந்த சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ். ஒரு காட்சியிலாவது அவர்கள் நடித்திருக்கிறார்களா என்று உன்னிப்பாகப் பார்த்தால் கூட அவர்களின் நடிப்பு தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையாக  நடித்திருக்கிறார்கள். அதிலும் சின்ன காக்கா முட்டையாக நடித்திருக்கும் ரமேஷ், சின்னச் சின்ன விஷயங்களில் கூட தன்னுடைய நடிப்பால் பிரமிக்க வைத்திருக்கிறான். அண்ணன் என்றாலே ஒரு கெத்துதான், அதில் தான் எடுக்கும் முடிவுகளில் தனித்துத் தெரிகிறான் பெரிய காக்கா முட்டை விக்னேஷ். இவன் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் தம்பி ரமேஷ். இருவருக்குமிடையே இருக்கும் அந்த பாசமான உறவு அவ்வளவு அழகாக வெளிப்பட்டுள்ளது.
அஜித்துடன் ஜோடி சேர வேண்டும், விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும், சூர்யாவுடன் ஜோடி சேர வேண்டும் என இந்தக் கால இளம் ஹீரோயின்கள் கனவு காண்பார்கள். ஆனால், அதையெல்லாம் விட இப்படி ஒரு படத்தில் நடிப்பதுதான் தன்னுடைய கனவு என இந்தப் படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடிக்க சம்மதித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹேட்ஸ் ஆப்’…எண்ணெய் வடியும் முகம், பழைய புடவை, பேச்சில் ஒரு ஏளனம் என அந்த அம்மா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்த விதம் அவரை இன்னும் பல காலம் ஞாபகம் வைத்திருக்கும். நல்ல படைப்புகளும், நல்ல கதாபாத்திரங்களும் உங்களை இன்னும் உயரத்திற்குக் கொண்டு போக வைக்கும் ஐஸ்வர்யா, உங்களின் இந்தத் தேடல் தொடரட்டும்.
பழரசமாக நடித்திருக்கும் ஜோ மல்லூரி, ஏரியாவின் சிறிய திருடர்களாக வரும் ரமேஷ் திலக், யோகி பாபு, பீட்சா கடை முதலாளி பாபு ஆண்டனி,  கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யாவின் மாமியாராக நடித்திருப்பவர் என மற்ற துணை கதாபாத்திரங்களும் அவர்களைப் பற்றி பேச வைத்திருக்கிறார்கள்.
சிம்பு நடிகர் சிம்புவாகவே நடித்திருக்கிறார். அவரால்தான் இந்தப் படத்தின் கதையே நகர ஆரம்பிக்கிறது. இருந்தாலும் பெரிய மனதுடன் இந்தப் படத்தில் தன்னை கிண்டலடிப்பதையும் மீறி அவர் நடித்தது பாராட்டுக்குரியது.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பின்னணி இசையை படத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இயக்குனர் மணிகண்டனே படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கதையை மீறாத இயல்பான ஒளிப்பதிவு.
இந்தப் படத்தை இயக்கிய மணிகண்டனுக்கு மணி மணியாய் பாராட்டுக்களை ரசிகர்களும், கூடவே ‘Money’ யையும் மற்ற  தயாரிப்பாளர்கள் அட்வான்சாக தாராளமாக அள்ளித் தரலாம்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெற்றி மாறன், தனுஷ் உடனே மணிகண்டனுக்கு அடுத்த படத்தின் அட்வான்சை முதலில் அள்ளித் தந்து அதை ஆரம்பித்து வைக்கட்டும்.

விமர்சனம்: ஸ்க்ரீன் ஃபார் ஸ்க்ரீன்


ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளின் நலன் காக்கும் சிறப்பு மருத்துவ திட்டம்!!

No comments :



ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய, மாநில அரசு களின் சிறப்பு திட்டமான பள்ளி குழந்தைகளின் நலம் காக்கும் மருத்துவ பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவ திட்டம்

தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளின் நலனை கருத் தில் கொண்டு அவர்களின் உடல் நலனை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நோய்கள் கண் டறிந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவு படுத்தி பள்ளி மாணவ- மாணவிகள் அனைவருக்கும் நோயில்லா வாழ்வை உறுதிப் படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளன. 


இதன்படி பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ குழு மாவட்டந்தோ றும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தாலுகாவிற்கு 2 குழுக்கள் வீதம் மருத்துவ குழுவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பரிசோ தனை செய்து உடனடி சிகிச்சை அளிப்பார்கள். உயர் சிகிச்சை தேவைப்படுபவர் கள் அரசு ஆஸ் பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார் கள். இதற்காக தமிழகம் முழு வதும் மருத்துவ குழுவிற்கான டாக்டர்கள் நியமிக்கப்பட் டுள்ளன. இவ்வாறு ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவிற்கும் தலா 2 குழுக் களுக்கு தேவை யான 22 டாக்டர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்களுடன் ஒவ் வொரு குழுவிலும் தலா ஒரு செவிலியர், மருந்தாளுனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மருத்துவ குழுவினர் அந்தந்த பகு திகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று சுழற்சி அடிப்படை யில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார்கள். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட் டுள்ள இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 1 வயது முதல் 6 வயதிலான குழந்தை களுக்கும், இதேபோல 18 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து நோய்களை கண்ட றிந்து சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத் துவ பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. 

இம்முகாம்களில் உயர் சிகிச்சை தேவைப்பட்ட 110 குழந்தைகள் அரசு ஆஸ்பத்தி ரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள் ளனர். தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால் மருத்துவ குழுவினர் பள்ளிக ளில் முகாம்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 80,000 பேருக்கு மருத்துவ பரி சோதனை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த பரிசோ தனையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு, பிறவி குறைபாடு உள்ளிட்ட அனைத்தும் பரி சோதித்து அதற்கு தேவையான மருந்துகள் வழங்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப் பட்ட குழந்தைகளின் பெற் றோர்களை வரவழைத்து தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் பவானி உமாதேவி தெரிவித்தார். 

செய்தி: தினத்தந்தி

ராமநாதபுரத்தில் நாளை (ஜூன் 7) அன்று மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு!!

No comments :



தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு ஜூன் 7 ஆம் தேதி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கே.டி.பிரபாகரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 16 முதல் 23 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு ஜூன் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.


 16 வயது முதல் 23 வயதுக்குள்பட்டோர் அதற்குரிய வயதுச் சான்றிதழ்களுடன் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் த.பிரபாகரன் செல்லிடப் பேசி எண்- 9842101314 அல்லது கிரிக்கெட் பயிற்சியாளர் மகேந்திரன் செல்லிடப் பேசி எண்- 9789515435 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சிக்கு சி.எப்.எல். பல்புகள் வழங்கப்பட்டது!!

No comments :



கீழக்கரை நகராட்சிக்கு ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான 90 சி.எப்.எல். பல்புகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

முக்தி அரா அனல் மின்நிலையத்தின் நிறுவனர் பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் மகன் அகமது புகாரி, இந்த பல்புகளை நகர்மன்றத் தலைவி ராவியத்துல் கதரியாவிடம் வழங்கினார்.   வள்ளல் சீதக்காதி சாலை முதல் கடற்கரை சாலை வரை 90 சி.எப்.எல். பல்புகள் பொருத்தப்பட உள்ளன.

இதில், சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக்தாவூது, கவுன்சிலர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


செய்தி: தினமணி