முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 10, 2015

ஏர் இந்தியா விமானத்தில் ரூ.1,777-க்கு பறக்கலாம்: முன்பதிவு ஆரம்பம்!

No comments :
ஏர் இந்தியா விமானத்தில் ரூ.1,777-க்கு பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு ஆரம்பம் ஆகிறது.


ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிலும்ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் விமான நிறுவனங்கள் சலுகை விலையை அறிவிக்கின்றன. கடந்த வாரத்தில்ஜெட் ஏர்வேஸ்ஸ்பைஸ் ஜெட்இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமான நிறுவனங்கள் சலுகை விற்பனையை அறிவித்து இருந்தன.இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் குறிப்பிட்ட காலங்களுக்கு பருவகால சலுகை விற்பனை அறிவித்துள்ளது. அதன்படி, ஏர் இந்தியா விமானங்களில் உள்நாட்டிற்குள் பயணம் செய்ய, இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதாவது 12 ஆம் தேதி வரை விமான பயண டிக்கெட்டுகளை 1,777 ரூபாய்க்கு சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை ஏர் இந்தியாவின் இணையதளம் வழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பருவகால சலுகையில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை பயணம் செய்யலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

செய்தி: விக்டன்


துபாய் Honeywell நிறுவனத்தில் Logistics Coordinator வேலை வாய்ப்பு!!

No comments :
Logistics Coordinator
Honeywell - Dubai

Responsibilities:
Receive
shipments at Warehouse and ensure allocation based on Customer Sales Order

Provide support for managing incoming shipments

Shipment Track from Supplier to direct to customer and prepare documentation
for customers

Prepare monthly shipping plan for suppliers

Trace, track and expedite shipments from supplier

Create and maintain contact with vendors and customers to ensure timely
delivery of goods

Interact with third party logistics service providers

Ensure accuracy of all inventories

Prepared paperwork associated with shipments

Maintain
communication with warehouse staff to ensure proper working order

Assist customers with destination clearance queries in terms of documentations

Organize files both manually and electronically

Coordinate deliveries for repaired or returned items

Manage paperwork associated with shipping duties

Qualifications

Minimum
3 years of experience in a similar role

Excellent written and oral communication skills

Good mathematical abilities and demonstrate analytical skills

Able to
efficiently solve problems relating to delivery issues from supplier and to customer

Hands
on experience on ERP (SAP)

Self organized and able to work in a multi cultural environment

Must be able to operate Microsoft Office and be familiar with any other
software pertinent to industry.

Cross
functional understanding of order management and sourcing

Click

here

to learn more about
Honeywell’s Automation & Control Solutions business.

Wonder
what it’s like to work at Honeywell? Check out our

One Honeywell Culture

video on the
Honeywell YouTube Channel.

Is this
job not an exact match to what you were looking for? Join

Honeywell's Talent Network

to
receive updates on other Honeywell employment opportunities, news and more. For
more information, please visit our career site 

TO APPLY: CLICK HERE


ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் திட்டங்கள் தொடங்க ரூ.50 கோடி முதலீட்டில் இலக்கு நிர்ணயம்!! - கலெக்டர் நந்தகுமார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.50 கோடி முதலீட்டில் தொழில் திட்டங்கள் தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகுமார் கூறினார்.


மாவட்டத்தில் வேளா ண் சார்ந்த வகையில் உணவு பதப்படுத்துதல், பொறியியல் நிறுவனங்கள், நெசவு, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், காகித தொழிலகங்கள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் நிறுவனங்கள், சூரிய ஒளிசக்தி உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தொழில் தொடங்க அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

உரிமம் மற்றும் அனுமதி பெறுவதில் உள்ள இடற்பாடுகள் தீர்க்கப்பட்டு மானியத்துடன் கூடிய தொழில் கடன் உதவிகள் ஏற்பாடு செய்யப்படுவதுடன் சிட்கோ தொழிற்பேட்டைகளில் முன்னுரிமை இடஒதுக்கீடு செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின் தொழில் வணிகத்துறையின் வழியாக வழங்கப்பட்டு வரும் மாநில மூலதனம், வாட், மின்கட்டணம், பத்திரக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களையும் சலுகைககளையும் தொழில் முதலீட்டாளர்களுக்கு விளக்கும் வகையில் சிறப்பு முகாம்களும், கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த ஆர்வமுள்ள தொழில் முதலீட்டாளர்கள் தாங்கள் உத்தேசித்துள்ள தொழில், திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் மற்றும் தேவைப்படும் உதவிகள் குறித்த விளக்கங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567230497 என்ற போனிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி: தினகரன்