முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 15, 2015

அமீரகம் Mott MacDonald நிறுவனத்தில் Civil Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Civil Engineer - Site

Mott MacDonald

UAE

Posted 7 days ago 
Ref: NP567-128


The Role

Mott MacDonald is a 1.2 billion management, engineering and development consultancy with 16,000 staff and a global reach spanning six continents. Our network of 180 principal offices in 140 countries gives us local market insight backed by world class expertise to deliver excellence for every client.

The power, process & nuclear division works within four main sectors which include the following: - nuclear, defence, industry and process and power civil's. We are actively seeking a Construction Civil Engineer - PPS (Physical Protection System) to join our client based onsite near Abu Dhabi. The successful candidates will have the opportunity to work within a specialist nuclear organisation.

Job Specification:
* Participate in safety, quality and scheduled review to ensure appropriate supervision for all PPS, Civil, Architectural and Marine works including but not limited to: site gradin, excavation, backfilling, dewater, soil investigation, rebar installation, concrete, placement (mud mats, base mats, bottom/ top slabs and walls), waterproofing, cast-in items, structural steel erections, architectural finishing/ coating /painting and all associated civil and architectural testing for the PPS.
* Assist in stabling recommendations to help making decisions that meet project objectives.
* Participate in recommending corrective actions or methods of repair for any deficiency or non-conformance identified in order to ensure work is carried out in an adequate and correct manner.
* Monitor project safety objectives, and implement the appropriate corrective actions where necessary in order to ensure that all relevant objectives are fulfilled.
* Provide support to the Senior Civil Engineer (PPS) for the review of contractor methods, materials, equipment, technical queries and working sequences.
* Assist in presenting ideas for the overall project benefits to support the Clients goals and objectives.
* Ensure that work is performed in the safest and professional manner to meet overall project objectives in compliance with relevant policies and regulations.
* Supervise the work progress and its alignment with the quality requirements as specified by the design documents including but not limited to drawing and specifications to ensure that project objectives are met in a timely manner.
* Supervise the civil and marine contractors to ensure expectations are met in the execution of build-clean, foreign material exclusion and housekeeping in the construction of PPS.
* Inform and report all important issues that may effect on project progress to Senior Civil Engineer (PPS).
* Follow all relevant company's HSE policies, processes, procedures and instructions to ensure HSE compliance in all aspect of work in accordance with sound management practices.

Requirements

The ideal candidate will have Up to 5 years of relevant experience in a nuclear power plant construction and engineering industry and/or experience on large capital projects and in similar/related position in the UAE, GCC region or worldwide. Also previous experience worked through the planning, design and construction of Nuclear Power Plants.

Desirably the candidate must have minimum of a Bachelor's degree in Civil Engineering with relevant trade certificates preferably in industrial safety, chartered or professional engineering and project management.

Technically must have awareness of civil electro- mechanical interface requirements, knowledge of design techniques and tools in the discipline, knowledgeable about project management systems, and excellent MS office skills. Skilled in using international code and standards in engineering and design of their discipline area is preferred.

Post based in Abu Dhabi with travel. Please note accommodation, subsistence and travel to and from site is included - mobilisation to and from UAE is also provided as well as a tax free salary.

Mott MacDonald is an equal opportunities employer

About the Company

The Mott MacDonald Group is a diverse management, engineering and development consultancy delivering solutions for public and private clients world-wide.
Mott MacDonald's uniquely diverse 1 billion global consultancy works across 12 core business areas.
As one of the world's largest employee-owned companies with over 14,000 staff, we have principal offices in nearly 50 countries and projects in 140.

TO APPLY: CLICK HERE

தமிழ் மொழியில் இனி துபாய் “ட்ரைவிங் தியரி டெஸ்ட்”!!

No comments :
துபாயில் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (ஆர்டிஏ) நடத்தி வருகிறது.

இதனை, ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதனால், இந்தியாவை சேர்ந்த பலர், லைசென்ஸ் பெற வேண்டுமானால், பல முறை முயற்சி செய்ய வேண்டி இருந்தது.


இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க ஆர்டிஏ முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல், தமிழ், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷியன், பெர்சியன் ஆகிய 7 மொழிகள் சேர்க்கப்படும். துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், மிக எளிதாக இந்தியர்கள் துபாய் டிரைவிங் லைசென்ஸ் பெற்று விடுவார்கள்.

துபாய் சாலை, போக்குவரத்து ஆணையத்தின், ஓட்டுனர் பயிற்சி மற்றும் தகுதி பிரிவின் இயக்குனர் ஆரிப் அல் - மலேக் இதுகுறித்து கூறியதாவது:
வரும் செப்டம்பர் முதல் தமிழ், மலையாளம், இந்தி, வங்கம், சீனா, ரஷ்யா மற்றும் பெர்ஷிய மொழிகளிலும், தேர்வு நடத்தப்படும். இதனால் எட்டு விரிவுரை வகுப்புகள் மற்றும் எழுத்து தேர்வுகளுக்கு, மொத்தம் உள்ள, 11 மொழிகளில் ஒருவர் தனக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

திரையில் தெரியும் வாசகத்தின் ஒலி வடிவை ஒருவர் 'ஹெட்போன்' மூலம் கேட்கலாம். அவரால் அந்த வாசகத்தை படிக்க முடியாது போனாலும் ஒலி வடிவில் அதை புரிந்து கொண்டு சரியாக பதில் அளிக்க முடியும் என்றார்.

செய்தி: கல்ஃப் நியூஸ்

 
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பெண்களுக்கான சிறப்பு ஓய்வறை!!

No comments :
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பெண்களுக்கான சிறப்பு ஓய்வறையை ரோட்டரி சங்க ஆளுநர் எம்.அசோக் பத்மராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இந்த விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.நானா என்ற நாகரெத்தினம் தலைமை வகித்தார். ரோட்டரி ஆளுநர்கள் (தேர்வு) நவமணி, டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, பட்டயத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட பயிற்றுநர் ஆறுமுகப் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் எம்.சரவணன் வரவேற்றார்.


ரோட்டரி சங்க ஆளுநர் எம்.அசோக்பத்மராஜ் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு ஓய்வு அறையை (குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை) திறந்து வைத்து அதற்கான சாவியை நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.எஸ்.சந்தானலெட்சுமியிடம் வழங்கினார். விழாவில் சங்க துணை ஆளுநர் பி.முனியசாமி, நிர்வாகிகள் சோமு, ஜெ.சுகுமார், ஜெ.தினேஷ்பாபு, பார்த்தசாரதி, செங்குட்டுவன், சண்முகராஜேஸ்வரன், மாவட்டத் திட்டக் குழு உறுப்பினர் கே.சி.வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரி

இராமநாதபுர மாவட்டத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் மனைவியுடன் கைது!!

No comments :
நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 13 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் வழி கேட்பது போல் நடித்து நகைகள் பறித்துச் செல்லப்பட்டன. திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரம் பகுதியில் வள்ளி என்ற பெண்ணிடம் 3 பவுன் தாலி சங்கிலியும், குண்டூரணிவலசை பகுதியில் பூரணி என்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியும், இதே பகுதியைச் சேர்ந்த பூமயில் என்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியும் பறித்துச் செல்லப்பட்டது.

மேலும் ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையப் பகுதியில் 10 பவுன் சங்கிலியையும், உச்சிப்புளி அருகே 3 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றதை தொடர்ந்து,

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், கீழக்கரை உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி தலைமையில், ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி, உதவி ஆய்வாளர்கள் ஜேசுதாஸ், தங்கசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை ரெகுநாதபுரம் பகுதியில் வாகன சோதனை நடந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றார்.
சந்தேகமடைந்த போலீஸார் அவரை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் சேதுபதி (29) என்பதும், இவர் தான் இருசக்கர வாகனத்தில் சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவரையும், இந்த நகைகளை விற்க உடந்தையாக இருந்த இவரது மனைவி ராஜேஸ்வரியையும் கைது செய்த போலீஸார் இவர்களிடமிருந்து 13 பவுன் நகைகளை மீட்டனர்.

மேலும் நகைகளை மீட்கவும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த சேதுபதியின் கூட்டாளியை பிடிக்கவும் போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


செய்தி: தினமணி