Thursday, June 18, 2015
துபாய் Drake&Scull நிறுவனத்தில் Admin Officer வேலை வாய்ப்பு!!
Personnel & Admin Officer
DSE Dubai - Dubai
DSE Dubai - Dubai
Provide administrative support to all Staff / Labours with regards to their daily problems and matters. Also make sure that all staff grievances, increments and other personnel issues do not affect their working progress. Responsibilities and duties:
Qualifications:
Years of Experience:
Person Requirements:
Communication and Interaction:
TO APPLY: corporate@drakescull.com.
|
ராமேசுவரம் கோவிலின் பிரகாரங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை!!
ராமேசுவரம் கோவிலின் பிரகாரங்களில் மழை நீர் தேங்காமல்
இருக்க நிரந்தர தீர்வு காணும் வகையில் கோவில் ரத வீதியில் புதிய வாருகால்
அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மழைநீர்
ராமேசுவரம் பகுதியில் மழை பெய்யும் போது கடந்த 3 வருடங் களுக்கு மேலாக ராமநாதசாமி கோவிலின் சாமி சன்னதி முதல் பிரகாரம்,2-ம் பிரகாரம் மற்றும் அம்மன் சன்னதி மண்டபங்களில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாகி வருகின்றது.கோவிலின் வாருகால் வழியாக வெளியேறும் தண்ணீர் வடக்கு,கிழக்கு ரதவீதி மற்றும் கோவிலின் அலுவலக வாசல் வழியாக உள்ள வாருகால் வழியாக வெளியேறி கடலில் கலக்கும் வகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வாருகால் அமைக்கப்பட்டுஇருந்தது. ஆனால் மழைகாலங்களில் தொடர்ந்து பிரகாரங்களில் மழை நீர் தேங்கி வந்ததால் அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கடந்த மாதம் கோவில் இணைஆணையர் செல்வராஜ்,உதவிகோட்டபொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் ரத வீதிகளில் அமைக்கப்பட்டு இருந்த கோவில் வாருகால் பகுதியை முழுமையாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மழைநீர்
ராமேசுவரம் பகுதியில் மழை பெய்யும் போது கடந்த 3 வருடங் களுக்கு மேலாக ராமநாதசாமி கோவிலின் சாமி சன்னதி முதல் பிரகாரம்,2-ம் பிரகாரம் மற்றும் அம்மன் சன்னதி மண்டபங்களில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாகி வருகின்றது.கோவிலின் வாருகால் வழியாக வெளியேறும் தண்ணீர் வடக்கு,கிழக்கு ரதவீதி மற்றும் கோவிலின் அலுவலக வாசல் வழியாக உள்ள வாருகால் வழியாக வெளியேறி கடலில் கலக்கும் வகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வாருகால் அமைக்கப்பட்டுஇருந்தது. ஆனால் மழைகாலங்களில் தொடர்ந்து பிரகாரங்களில் மழை நீர் தேங்கி வந்ததால் அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கடந்த மாதம் கோவில் இணைஆணையர் செல்வராஜ்,உதவிகோட்டபொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் ரத வீதிகளில் அமைக்கப்பட்டு இருந்த கோவில் வாருகால் பகுதியை முழுமையாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கோவிலுக்கு சொந்தமான வாருகால் பகுதியில் வடக்கு,கிழக்கு ரத வீதிகளில் உள்ள தனியார் விடுதி,ஒரு சில மடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் கோவிலின் வாருகாலில் இணைக்கப்பட்டு இருந்ததும், வாருகாலில் அடைப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவிலின் வடக்கு ரத வீதிகளில் உள்ள கோவிலுக்கு சொந்தமான வாருகாலின் அடைப்பை சரி செய்யும் பணி கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடந்து வந்தது. தற்போது அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு வசதியாக ரத வீதியில் வாருகால் அமைந்துள்ள 5 இடங்களில் தொட்டிகள் அமைப்பட்டு உள்ளன. கோவிலின் அலுவலக வாசல் பகுதியில் இருந்து கடற்கரை வரையிலும் புதிய வாருகால் அமைக்க ஏற்கனவே உள்ள வாருகால் பகுதி நேற்று ஜே.சி.பி.இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு முழுமையாக அகற்றப் பட்டது.அதே இடத்தில் தண்ணீர் வேகமாக வெளியேறும் வகையில் பெரிய குழாய்கள் அமைக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.
ரூ.4½ லட்சம் நிதி
இந்த பணிகளை கோவிலின் இணை ஆணையர் செல்வராஜ்,உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். பின்னர் இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது:-
புதிய வாருகால் அமைக்க 20-க்கும் மேற்பட்ட பெரிய சிமெண்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கிஉள்ளன.இந்த பணிகள் இன்னும் 1 வாரத்தில் முழுமையாக முடிவடைந்து விடும்.புதிய வாருகால் பணிக்கு ரூ.4½ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இனிமேல் மழை பெய்யும் போது கோவிலின் எந்தவொரு பிரகாரத்திலும் மழை நீர் தேங்காது.
செய்தி: தினத்தந்தி
ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் மரபணுப் பூங்கா, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!!
கிழக்கு
கடற்கரைச் சாலையில், ராமநாதபுரம் அருகே அச்சடிப்பிரம்பு
கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ. 7.29 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்திணை மரபணுப்
பூங்காவை, முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம்
செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
ராமநாதபுரத்திலிருந்து
கீழக்கரை செல்லும் சாலையில் அச்சடிப்பிரம்பு கிராமத்தில், தோட்டக்கலைத் துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த மரபணுப் பூங்கா
திறப்பு விழாவில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலர்கள்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பின்னர், பூங்காவுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு
இனிப்புகளை வழங்கினர்.
ராமநாதபுரத்திலிருந்து
5 கி.மீ. தொலைவில் உள்ள இப்பூங்கா, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, அழகிய நுழைவுவாயில், தகவல் தொழில்நுட்ப மையம், புல்வெளிகள், பாலைவனம் போன்று மணல் திட்டுகள், சங்ககால மனிதர்களின் நாகரீகம், வாழ்வாதாரம் பற்றி விவரிக்கும் சிலை அமைப்பு,
நீர்த்தடாகம், விலங்குகளின் சிலைகள், நிழல் தரும் அழகிய ஓலைக் குடில்கள், ஒளி தரும் வண்ண விளக்குகள், திறந்தவெளி அரங்கம், தானியங்கி நீர்த் தெளிப்பான்கள், உணவகம் உள்ளிட்டவையும்
அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மாலை யில் பொழுதுபோக்க வசதியாக இப்பூங்கா
சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.
செய்தி: ஜெயா நியூஸ்