முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 27, 2015

குவைத் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்றது IS அமைப்பு!!

No comments :
குவைத் நாட்டில் உள்ள அல் சவாபர் பகுதியில் அமைந்துள்ள ஷீயா பிரிவினருக்கு சொந்தமான இமாம் சாதிக் பள்ளிவாசலில் நேற்று ஜும்மா தொழுகை நேரத்தில் இடம்பெற்ற மோசமான தற்கொலை தாக்குதல் ஒன்றில் 13 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.




இந்த குண்டுவெடிப்பிற்கு இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு பொறுப்பேற்றது.
இது குறித்து அறிவித்த அவ்வமப்பு, ஷீயா பள்ளிகளை “temple of rejectionist" என்று குறிப்பிட்டுள்ளது.

UAE Menasa & Partners நிறுவனத்தில் Structural Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Structural Engineer (With ICC)

Menasa & Partners

UAE

Posted 4 days ago 
Ref: MP552-518









The Role

A regional design consultancy who have been who were set up around 50 years ago, are currently conducting a search for a Principal Structural Engineer. The position is based in either Dubai, Al Ain or Abu Dhabi, UAE you will be taking projects from concept design through to completion. My client is looking for someone who has over 10+ years’ experience using ICC codes. 

Responsibilities 
- You will be taking projects from concept design through to completion
- You will provide expert assistance to the site team
- Help implement and check that all designs are in line with ICC codes 
- Understand the ICC codes
- Coordinate with sub-consultants, clients and contractors
- Develop and redesign any drawings from the sub-consultants
- Coordinate with the other disciplines
- Well organized individual who has strong written and verbal communication skills
- Regularly attend client meetings and give presentations
- You must be able to work independently and deliver on time

Requirements

- Must have a degree a BEng/BSc/BA in Structural/Civil Engineering
- Have 12+ years’ experience in industry
- Must have 10+ years’ experience in ICC codes
- Working knowledge of Revit, MS Office and CAD
- Preference will be shown to those with GCC experience
- Managed outsourcing companies or teams before
- Strong written and verbal communication
- You must have worked on a number of healthcare projects

In return you will be rewarded with a salary between 40-45K AED tax free, medical and life insurance. You will also be working for a regional consultancy who have a number of projects around the region.

About the Company

The name MENASA originates from both the geographical region of Middle East, North Africa & South Asia as well as the Arabic word for platform or stage. We provide the platform for employers to approach the best global talent available.
Menasa & Partners is a privately owned, fully licensed, Executive Search company head-quartered in Dubai, UAE.
From our head office in Dubai we are ideally placed to assist organizations in the global search for talent.
We specialize in providing companies not only with suitable individuals to work in their organizations but also offer unparalleled knowledge of the global markets.
Our staff all have in depth knowledge of their vertical markets therefore offering tailored strategic advice.

TO APPLY: CLICK HERE

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் - ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

No comments :
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என, ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி எஸ். ஷேக்முகம்மது வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். சேக் முகம்மது கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


பின்னர் அவர் பேசுகையில், வாகனம் ஓட்டுபவர்கள் தங்களது உயிரைக் காக்க கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும். தலைக்கவசம் அணியவில்லையென்றால், வாகனத்தின் அனைத்து ஆவணங்களும், ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும். ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட புதிய தலைக்கவசம் வாங்கியதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை விடுவிப்போம் என்றார்.

பேரணி தொடக்க விழாவுக்கு, ராமநாதபுரம் டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் முன்னிலை வகித்தார். இயக்கூர்தி ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்றுப் பேசினார். இதில், இயக்கூர்தி ஆய்வாளர்கள் மாணிக்கம், அசோக்குமார் உள்பட காவல் துறையினர், இரு சக்கர வாகன விற்பனை நிறுவனப் பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்வோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பேரணியானது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தது.
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி: காவல்துறை சார்பில், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திலிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணியை, ஏ.எஸ்.பி. சுகுணாசிங் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார், போக்குவரத்து ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆயுதப்படை மைதானத்தை அடைந்தது.