முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 4, 2015

ராமநாதபுரத்தில் குரூப் 2 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!!

No comments :



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி, போகஸ் அகாதெமி சார்பில் இம்மாதம் 8 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் வலம்புரி மகாலில் செயல்பட்டு வரும் போகஸ் அகாதெமி, வரும் 8 ஆம் தேதி முதல் தொடர்ந்து 7 நாள்களுக்கு இப்பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளது.

சுமார் 1064 பணியிடங்களுக்கான இந்த குரூப்-2 நேர்முகத் தேர்வினை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி நடத்தவுள்ளது.

இந்த வகுப்பில், அரசு உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கின்றனர். இதில், நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்தும், மாதிரி நேர்காணலும் நடத்தப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் வலம்புரி மகாலில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 94427-22537 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என இதன் ஒருங்கிணைப்பாளர் மு. சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.



துபாய் Menasa & Partners நிறுவனத்தில் Electrical Design Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Electrical Design Engineer

Menasa & Partners

Dubai, UAE

Posted 4 days ago
Ref: MP552-526








The Role

A top international engineering consultancy providing exceptional design solutions to clients globally, has an exciting opportunity for an Electrical Engineer to join their expanding team in Dubai.

Reporting to the Senior Electrical Engineer you will be involved in the electrical design and delivery of complex mixed-use developments. You will be responsible for undertaking conceptual, schematic and detailed electrical designs for building and infrastructure projects.

You will represent the company at client and supplier meetings and liaise with local authorities to ensure designs comply with local codes and standards. Working closely with your mechanical counterpart will play an integral part in ensuring technical and design excellence throughout the organization.

Requirements

To be considered for this role you will have a degree in electrical engineering, 6+ years of experience and a proven ability to design LV power systems, ELV systems, fire detection and alarm, CCTV, earthing and lightning protection.

In return you will be rewarded with an excellent working environment and the opportunity to work on large-scale prestigious projects, to the highest of international standards.

About the Company

The name MENASA originates from both the geographical region of Middle East, North Africa & South Asia as well as the Arabic word for platform or stage. We provide the platform for employers to approach the best global talent available.
Menasa & Partners is a privately owned, fully licensed, Executive Search company head-quartered in Dubai, UAE.
From our head office in Dubai we are ideally placed to assist organizations in the global search for talent.
We specialize in providing companies not only with suitable individuals to work in their organizations but also offer unparalleled knowledge of the global markets.
Our staff all have in depth knowledge of their vertical markets therefore offering tailored strategic advice.

TO APPLY: CLICK HERE

பாபநாசம் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிப்பு: கமல் ஹாஸன், கவுதமி, நிவேதா தாமஸ், அருள்தாஸ், கலாபவன் மணி, இளவரசு, ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன் ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா இயக்கம்: ஜீத்து ஜோசப்



மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு நல்ல திரைக்கதை... கமலை வைத்துக் கொண்டு அதில் இம்மியளவுக்குக் கூட மாற்றமோ சமரசமோ இல்லாமல் பாபநாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் கமல் ஹாஸன், மனைவி கவுதமி, இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மகள் ஒரு முறை அகஸ்தியர் மலைக்கு பள்ளிக் கூடம் மூலம் இயற்கை சுற்றுலா செல்கிறார். அப்போது அவரையும் அறியாமல் ஒரு சிக்கலில் மாட்டுகிறார். அது ஒரு கொலையில் போய் முடிகிறது.

படிக்காத கமல், இந்த பெரும் சிக்கலிலிருந்து மகளையும் குடும்பத்தையும் எப்படி புத்திசாலித்தனமாகக் காப்பாற்றுகிறார்.. அதுவும் தான் பார்த்த சினிமாக்களின் துணையுடன் என்பதெல்லாம் திரையில் போய்ப் பார்த்து ரசிக்க வேண்டியவை! கதையும் திரைக்கதையும் மிக அசாதாரணமானது. ரொம்பப் பக்குவமாக காட்சிப்படுத்த வேண்டியது. அதைப் புரிந்து அழகாக ஒத்துழைத்திருக்கிறார் கமல் ஹாஸன். பொதுவாக கமல் ஹாஸன் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரத்தை மீறி, ஒரு நடிகர் என்பது தனித்துத் தெரியும். அதை ஒரு விமர்சனமாகவும் அவர் மீது வைப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, அவரது நெல்லை வட்டார வழக்கு தவிர்த்துப் பார்த்தால், எங்கும் கமல் என்ற நடிகர் தெரியவில்லை. சுயம்புலிங்கம்தான் தெரிகிறார். அவர் இத்தனை 'ஸ்ட்ரிக்டாக' நெல்லைத் தமிழைப் பேசியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் கமலின் உடல் மொழி அசர வைக்கிறது. குறிப்பாக டிஐஜி அலுவலகத்தில் கமலை அடித்து துவைக்க, வேறு பாத்திரங்கள் பிரதானமாய் வரும்போதும், கமல் தரையில் விழுந்தபடியே கிடப்பார்.



அதே காட்சியில் மகள் உண்மையைச் சொல்லிவிடுவாளோ என பதட்டத்தில் பார்வையைத் திருப்ப முயற்சிப்பவர், போலீஸ் கவனிப்பதை உணர்ந்து கண நேரத்தில் சட்டென்று மீண்டும் அப்பாவியாக ஒரு பார்வை பார்ப்பார். தழுதழுக்கும் குரலில் உண்மையை நேரடியாகவும் சொல்லாமல், அதே நேரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிகிற மாதிரியும் சொல்லும் அந்த க்ளைமாக்ஸில் கமலுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறார் இயக்குநர். கவுதமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். இயல்பாக நடித்திருந்தாலும், அவரது தோற்றத்தில் தெரியும் தளர்ச்சி, மிக முக்கியமான ஒரு காட்சயில் நெருடலைத் தருகிறது. காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளாக வரும் அத்தனை பேரும் உண்மையான போலீசாகவே தெரிகிறார்கள். குறிப்பாக அருள்தாஸ். கமலை விசாரிக்க வீட்டுக்கு வரும் அவர், விசாரணை செய்யும் விதம், நிஜ போலீசே தோற்றுவிடும். கலாபவன் மணியும் அபாரம்.

டிஐஜியாக வரும் ஆஷா சரத்தும், அவர் கணவராக வரும் ஆனந்த் மகாதேவனும் படத்துக்கு பெரிய பக்கபலம். அருமையான நடிப்பு. இளவரசு, எம்எஸ் பாஸ்கர், மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர் அத்தனை பேருமே மனதில் நிற்கிறார்கள். இந்தப் படத்தை எதற்காக மூன்று மணி நேரமாகத் தந்தார்கள் என்பது ஒரு பெரிய குறை. படத்தை ரொம்ப நேரம் பார்ப்பது போன்ற உணர்வு வர முக்கிய காரணம் அந்த ஆரம்ப காட்சிகள்தான். படத்தில் முக்கிய நெருடல்.. சாமர்த்தியமாக தடயங்களை மறைத்துவிட்டால் சரியாகிவிடுமா என்பது. அதற்கு கடைசி காட்சியில் கமல் - கவுதமி உரையாடல் மூலம் பதில் சொல்லிவிடுகிறார் இயக்குநர். ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுஜித் வாசுதேவ். பாபநாசமும் மேற்குத் தொடர்ச்சி அடிவார குளிர்காற்றும் உடலையும் மனசையும் தழுவிச் செல்லும் உணர்வைத் தருகின்றன காட்சிகள்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசையில் சரிகட்டிவிடுகிறார். முதல் பாதியில் வரும் சில காட்சிகளுக்கு கத்தரி போடுவதில் பிடிவாதம் காட்டியிருக்கலாம் எடிட்டர். இந்த காலகட்டத்துக்கு நிச்சயம் இப்படிப்பட்ட படங்கள் அவசியம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

விமர்சனம்: ஒன் இண்டியா