முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 11, 2015

அபுதாபி Dar Al Handasah நிறுவனத்தில் Mechanical Site Inspection Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Mechanical Site Inspection Engineer

Dar Al Handasah

Abu Dhabi, UAE

Posted 5 days ago 
Ref: GP714-15The Role

Working as an Mechanical Site Inspection Engineer, you will be directly reporting to Construction Supervisor and Construction Manager, mostly responsible for the following:
- Supervise, manage, and conduct inspections as per approved documents in accordance to the project contract and requirements.
- Monitor site activities ensuring contractor and consultant's work quality is compliant to contract requirements and good construction practice.

Requirements

- Candidate must have minimum of 6 years work experience in UAE in large scale construction projects (preferably infrastructure and hospital/healthcare facility projects).
- Candidate must have Bachelor's degree in Mechanical Engineering.
- Candidate must have experience working with PMCs.

Candidate must have extensive knowledge in the following systems:
- Chilled water distribution network
- Sewerage network
- Irrigation network
- Storm water
- Gas network
- Lifting station
- Pumping station
- HVAC, firefighting and plumbing systems

- Candidate must be readily in UAE to attend the interviews.
- Candidate must be able to join immediately.

About the Company

Dar Al-Handasah (Shair and Partners) has been a pioneering force in the planning, design and implementation of development projects in the Middle East, Africa and Asia since its beginnings in 1956. Today we are a global consultancy with 43 offices throughout 29 countries, known for our problem identification, tailor made-designs, quality, on-time deliverables and multi-disciplinary expertise.

TO APPLY: CLICK HERE

குரூப்-1 தேர்வு அறிவிப்பு!!

No comments :
74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு (வெள்ளிக்கிழமை) வெளியானது. தேர்வு எழுத ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.

குரூப்-1 தேர்வு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு (வெள்ளிக்கிழமை) வெளியானது.

துணை கலெக்டர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.இன்று அறிவிப்பு வெளியானதும். தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம்.

கடைசி நாள் இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசிநாள்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை கொண்டவை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும்.

துணைகலெக்டர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்கள். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆகலாம்.
முதல் நிலை (பிரிமிலினரி) தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்கிறது.


ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டம்!!

No comments :
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


22
ஆயிரம் கோடி ரூபா செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும் கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்படவுள்ளது. டில்லியில் நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து தொடர்பான மாநாட்டு இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய கப்பல் மற்றும் வீதி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை பலப்படுத்த போக்குவரத்து இணைப்பு வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது. பங்களாதேஷ், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளையடுத்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக 22 ஆயிரம் கோடி ரூபாவை கையளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. 
இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த சாலை 22 கிலோ மீற்றர் தூரத்துக்கு அமையலாம். 

கடலுக்கு மேல் பாலம் அமைத்தும் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்தும் இந்த சாலை திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகள் மூலமாக 50 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்காக ஆறு இலட்சம் கோடி ரூபா செலவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த இலக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டப்படும். சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் ஏற்கனவே ஒரு இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என நிதின் கட்கரி மேலும் தெரிவித்தார்.